For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் போட்ட பதிவு.. எப்படி நீங்க அந்த பதவியில் இருந்தீங்க.. கடும் கண்டனம்

மும்பை : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி குறித்து முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சுனில் ஜோசி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.

பழைய தேர்வு குழுவில் உறுப்பினராக சுனில் ஜோசி விளங்கினார். இவர் தற்போது நாக்பூர் டெஸ்டில் களமிறங்க வேண்டிய இந்திய அணி வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய அணி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , சுப்மன் கில் களமிறங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் அவர் சொன்னது தான் காமெடியே இருக்கு.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

மூன்றாவது வீரராக சூரியகுமார் யாதவ் தான் விளையாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுவரிசையில் விராட் கோலி, கேஎல் ராகுல்,கே எஸ் பரத் ஆகியோர் பேட்டிங் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சுனில் ஜோசி பந்துவீச்சாளர்களாக அஸ்வின், ஜடேஜா குல்தீப் யாதவ் என்ற மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

வேகப்பந்துவீச்சாளராக அவர் முகமது சமியும், முகமது சிராஜியும் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் டெஸ்ட் அணியின் சிறந்த வீரராக கருதப்படும் புஜாராவை சேர்க்காமல் சூரியகுமார் யாதவை அவருடைய இடத்தில் சுனில் ஜோசி போட்ட பதிவுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பல ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் குறித்து எந்த ஒரு அறிவும் இல்லாமல் எப்படி உங்களால் இது போன்ற அணியை தேர்வு செய்ய முடிந்தது.

தேர்வுக்குழு உறுப்பினர்

தேர்வுக்குழு உறுப்பினர்

இதில் நீங்கள் எப்படி இரண்டு ஆண்டுகள் இந்திய அணி தேர்வு குழுவில் பணிபுரிந்தீர்கள் என்று ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி வருகின்றனர். மேலும் சிலர் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தோல்வி அடைந்ததற்கு இதுபோன்ற தேர்வு குழு உறுப்பினரின் தவறான செயல்பாடு காரணம் என்பது தற்போது தெளிவாகிறது என்று விமர்சித்திருக்கிறார்கள்.

யோசிக்க மாட்டாரா

யோசிக்க மாட்டாரா

கிரிக்கெட் தெரியாத பாமர மக்கள் கூட இப்படி யோசிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் சுனில் ஜோசி எப்படி தேர்வு குழு உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் தன்னுடைய காலத்தை ஓட்டினார் என்றும் பலரும் சாடி வருகின்றனர். சுனில் ஜோசிக்கு சூரிய குமார்யாதவ் மீது ஆர்வம் இருந்தால் அதில் தவறு இல்லை என்றும், ஆனால் புஜாரா போன்ற டெஸ்ட் வீரருக்கு பதில் சூரியகுமார் சேர்க்க வேண்டும் என்று இப்படி பதிவிட்டால் அது புஜாராவின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை கூட சுனில் ஜோஷி யோசிக்க மாட்டாரா என்றும் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, February 7, 2023, 21:41 [IST]
Other articles published on Feb 7, 2023
English summary
Ex chief selector sunil joshi facing heat by fans over team selection முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் போட்ட பதிவு.. எப்படி நீங்க அந்த பதவியில் இருந்தீங்க.. கடும் கண்டனம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+