Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தின் கேப்டன்ஷியால் தான் இந்தியா வென்றது.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து.. எப்படிங்க ?

மெல்போர்ன் : ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தில் வென்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தலா நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர்.31 ரன்களுக்கு நான்கு விக்கெட் எடுத்து கடும் நெருக்கடியில் இந்தியா சிக்கிய நிலையில் ஹர்திக் பாண்டியாவும் விராட் கோலி 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ரோகித்துக்கு பாராட்டு

ரோகித்துக்கு பாராட்டு

இதில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.கடைசி ஓவரில் அஸ்வின் பதறாமல் கடைசி பந்தில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தார்.இந்த நிலையில் இந்தியாவின் வெற்றி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன்லால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி பிரமிக்கும் வகையில் இருந்ததாக பாராட்டினார்.

ரோகித் சிறந்த முடிவு

ரோகித் சிறந்த முடிவு

இது குறித்து பேசிய அவர் அக்சர் பட்டேல் தனது முதல் ஓவரில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்த பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கொடுக்காமல் ரோகித் சர்மா மற்ற வீரர்களை தேர்ந்தெடுத்தது சிறந்த முடிவாக நான் கருதுகிறேன். இதுதான் உச்சபட்சமான சிறந்த கேப்டன்ஷி. இதேபோன்று அஸ்வினுக்கு அவர் அதிக ஓவர்களை வழங்கினார். அனுபவம் வாய்ந்த அஸ்வின் ரன்களையும் கட்டுப்படுத்தி நெருக்கடி ஏற்படுத்தினார்.

ரோகித் நல்ல தலைன்

ரோகித் நல்ல தலைன்

இதனால் தான் இந்தியா வெற்றி பெற்றதாக மதன் லால் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சுரேஷ் ரெய்னாவும், ரோகித் சர்மா மீது அணி வீரர்கள் மிகுந்த மரியாதையை வைத்திருக்கிறார்கள்.மற்ற வீரர்களுடன் அவர் சிறப்பாக உரையாடுகிறார். அவர் ஒரு நல்ல தலைவனாக விளங்குகிறார்.இதனால் வீரர்களும் கேப்டனாக ரோஹித் சர்மாவை மதிக்கிறார்கள் என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.

Story first published: Tuesday, October 25, 2022, 16:51 [IST]
Other articles published on Oct 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+