For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செஞ்சுரி அடிச்சுட்டுதான் நிப்பாரு... அதுவரைக்கும் அவர் ஓட்டத்தை தடுக்க முடியாது... லஷ்மன் உறுதி!

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ரோகித் சர்மா விளையாடவுள்ளார்.

இந்த இரு போட்டிகளின் துணை கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம்.. பின்னணி இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம்.. பின்னணி

இந்நிலையில் சிட்னியில் நடைபெறவுள்ள 3வது போட்டியில் ரோகித் சர்மா சதமடிப்பார் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் துவக்கம்

நாளை மறுதினம் துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியிலும் 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. 3வது போட்டி நாளை மறுதினம் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் ரோகித் சர்மா பங்கேற்று ஆடவுள்ளார். மேலும் அவர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

துவக்க வீரராக ஆட்டம்

துவக்க வீரராக ஆட்டம்

நெட் பயிற்சியிலும் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர் சிட்னி போட்டியில் துவக்க வீரராக விளையாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

கடந்த போட்டிகளில் சொதப்பிய மயங்க் அகர்வால், ரோகித் சர்மாவிற்கு அணியில் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் லஷ்மன் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி இல்லாத இந்த நேரத்தில் ரோகித் சர்மாவை இந்திய அணி சிறப்பாக வரவேற்றுள்ளதாகவும் கூறினார்.

சிறப்பான வாய்ப்பு

சிறப்பான வாய்ப்பு

சமநிலையில் உள்ள தொடரை சிட்னி போட்டியின் வெற்றி மூலம் 2க்கு 1 எனவும் அடுத்த போட்டியில் 3க்கு 1 எனவும் வெற்றி பெற இந்தியாவிற்கு சிறப்பாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிட்னி போட்டியில் ரோகித் சர்மா சதமடிப்பார் என்றும் லஷ்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, January 5, 2021, 16:34 [IST]
Other articles published on Jan 5, 2021
English summary
I'm sure that a big hundred is on the cards as far as Rohit's batting is concerned -Laxman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X