Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் சமூக வலைத்தள பக்கம்.. பின்தொடருவதை நிறுத்தினாரா ரெய்னா..? உண்மை என்ன?

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் ரெய்னா விலை போகாதது தான் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Suresh Raina Emotional Interview After Being Unsold In IPL auction 2022 | Oneindia Tamil

இதனால் ரெய்னா ரசிகர்கள் மனமுடைந்து, இனி சிஎஸ்கே வை பின் தொடர்வது இல்லை என்று கூறிவிட்டனர்.

மற்ற அணிகளும் ரெய்னாவை எடுக்காத நிலையில், ரசிகர்களின் கோபம் எல்லாம் சிஎஸ்கே மீது தான் திரும்பியுள்ளது.

சிஎஸ்கே விளக்கம்

சிஎஸ்கே விளக்கம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிஎஸ்கே நிர்வாகம், ரெய்னா ஒரு சிறந்த வீரர், சென்னை அணிக்காக 12 ஆண்டுகள் பல வெற்றியை பெற்று தந்துள்ளார். ஆனால் கள நிலவரத்தை வைத்து தான் நாங்கள் முடிவு எடுத்தோம் என்றும், ரெய்னாவை மிஸ் செய்வோம் என்று கூறி இருந்தது. ஆனால் இது வரை ரெய்னா குறித்து தோனி இதுவரை வாய் திறக்கவில்லை.

நிறுத்தினாரா ரெய்னா?

நிறுத்தினாரா ரெய்னா?

ரெய்னாவுக்கும், தோனிக்கும் நட்பில் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் தான் ரெய்னா சிஎஸ்கே அணியில் இடம்பெறவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கத்தில் தோனியை பின்தொடர்வதை ரெய்னா நிறுத்திவிட்டதாக சமூக வலைத்தள பதிவுகள் வெளியானது.

உண்மை இல்லை

உண்மை இல்லை

இது உண்மையா என்பது குறித்து ஆய்வு செய்ய ரெய்னாவின் சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்தோம். அதில் ரெய்னா கோலி, ரோகித், கீர்த்தி சுரேஷ், தீபக் ஹூடா போன்றவர்களை எல்லாம் பின் தொடர்ந்து இருந்தார். இந்த பட்டியலில் கீழே தோனியின் பெயரும் அவர் பின் தொடரும் பட்டியலில் இருந்தது. எனவே அந்த பதிவுகளில் உண்மை இல்லை.

விரிசல் இல்லை

விரிசல் இல்லை

இதன் மூலம் தோனி, ரெய்னாவின் நட்பில் எவ்வித விரிசலும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. ரெய்னா ஃபார்ம் பாதிக்கப்பட்டதால் மட்டுமே தோனி இந்த கடினமான முடிவை எடுத்து இருக்கலாம். சொல்ல முடியாது நாளை ஐபிஎல் பயிற்சியாளர் அணியில் ரெய்னாவுக்கு என்று ஒரு பொறுப்பை சிஎஸ்கே தரலாம்.

Story first published: Tuesday, February 15, 2022, 22:30 [IST]
Other articles published on Feb 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+