For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குட் நியூஸ்.. குட்டி ஹிட்மேன்? ரோஹித் சர்மா ரசிகர்கள் குஷி.. ரித்திகா புகைப்படத்தின் பின்னணி என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வீட்டில் இருந்து நல்ல செய்தி வரப் போவதாக அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவின் புகைப்படம் ஒன்று நேற்று முதல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதை வைத்து ரோஹித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் பல்வேறு ஊகங்களை கிளப்பி வருகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Rohit Sharma india

2018 ஆம் ஆண்டு அவர்களுக்கு சமைரா என்ற மகள் பிறந்தார். தற்போது ரித்திகா சஜ்தேவின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவரது வயிற்றுப் பகுதி பெரிதாக இருப்பதை சுட்டிக் காட்டும் ரசிகர்கள், அவர் இரண்டாவது குழந்தையை பெறப் போவதாக செய்திகளை பரப்பி வருகின்றனர்.

ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சிலரோ, "குட்டி ஹிட்மேன்" பிறக்கப் போகிறார் என உண்மை என்ன என்று தெரியாமலேயே சமூக வலை தளங்களில் தங்கள் உணர்ச்சிப் பெருக்கை வெளியிட்டு வருகின்றனர். ரோஹித் சர்மா அதிரடியாக பேட்டிங் ஆடும் பாணியால் அவரை ஹிட்மேன் என அழைக்கப்படுகிறார். அதை வைத்து அவருக்கு மகன் பிறப்பார் என்ற கணிப்பின் அடிப்படையில் குட்டி ஹிட்மேன் பிறக்கப் போகிறார் என கூறி வருகின்றனர்.

ரோஹித் சர்மா தரப்பிலோ அல்லது ரித்திகா தரப்பில் யாரும் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்ட ஏதோ ஒரு புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் தாங்களாகவே இந்த தகவலை பரப்பி வருகின்றனர். இது உண்மையாகவும் கூட இருக்கலாம். எனினும், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டு அவரது கிரிக்கெட் வாழ்விலேயே முக்கிய ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடரை கேப்டனாக வென்றார் ரோஹித் சர்மா. அடுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார். இதிலும் இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

Story first published: Saturday, August 24, 2024, 13:28 [IST]
Other articles published on Aug 24, 2024
English summary
Fact Check: Is Rohit Sharma and Ritika Sajdeh expecting their second baby?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+