For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்விக்கு காரணம் கோலியின் பேட்டிங் தான்?மறைமுகமாக விமர்சித்த டுபிளசிஸ்.. ஆர்சிபி அணியில் பிளவு

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூர் அணியை டெல்லி கேப்பிடல் அணி வீழ்த்திருக்கிறது. விராட் கோலியின் சொந்த மண் டெல்லி என்பதால் அங்கு வெற்றி பெற முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

இந்த ஆட்டத்தில் 182 என்ற இலக்கை டெல்லி அணி 16.4 ஓவர்களில் எல்லாம் கடந்து அசத்தி இருக்கிறது. இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஆர்.சி.பி கேப்டன் டுபிளசிஸ் தற்போது பார்க்கலாம்.

நாங்கள் முதலில் பேட்டிங் செய்தபோது வெற்றிக்கு தேவையான இலக்கை தான் நிர்ணயித்தோம் என்று நினைத்தேன். 185 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு ஏற்பட்டது. எனினும் நான் டெல்லியின் பேட்ஸ்மேன்களுக்கு முழு பாராட்டை தெரிவித்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவர்கள் அபாரமாக விளையாடினார்கள்.

 Faf du plessis asks RCB Middle order batsman to put their hands to score runs

எங்களுடைய சுழற் பந்து வீச்சாளர்கள் மீது நெருக்கடி செலுத்தி அவர்களை தவறு செய்ய தூண்டினார்கள். நாங்கள் பேட்டிங் செய்யும்போது சிறப்பாக விளையாடவில்லை. 12 ஓவர்களில் நாங்கள் விளையாடிய போது 185 ரன்கள் இந்த மைதானத்தில் ஆவரேஜ் ஸ்கோர் என எண்ணினோம்.

நடு ஓவர்களில் நாங்கள் கொஞ்சம் இருபது ரன்கள் அடித்திருந்தால் எங்களுடைய இலக்கு 200 தாண்டி இருக்கும். அது இந்த மைதானத்தில் ஒரு நல்ல ஸ்கோர் ஆக இருந்திருக்கும். எனினும் எங்களுடைய பந்துவீச்சாளர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். குறிப்பாக பவர் பிளேவில் டெல்லி அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது மேக்ஸ்வெல் வந்து விளையாட நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தோம் .

எனினும் லோமினார் ஐந்தாவது வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடியது பார்ப்பதற்கு மகிழ்ச்சி தருகிறது. இது அவருக்கு நிச்சயமாக பாசிட்டிவான விஷயம் தான். நம்பர் 3வதாக களமிறங்கும் வீரர்கள் பேட்டிங்கில் கை கொடுத்து கூடுதலாக ரன் சேர்க்க வேண்டும். நடு வரிசையில் ஆர் சி பி பேட்டிங் தடுமாறுகிறார்கள். டெல்லிய அணி வீரர்கள் சேசிங் செய்யும் போது முதல் ஆறு ஓவரிலேயே எங்களுடைய உத்வேகத்தை உடைத்து விட்டார்கள் என்று டுபிளசிஸ் பாராட்டி இருக்கிறார்.

Story first published: Saturday, May 6, 2023, 23:32 [IST]
Other articles published on May 6, 2023
English summary
Faf du plessis asks RCB Middle order batsman to put their hands to score runs தோல்விக்கு காரணம் கோலியின் பேட்டிங் தான்?மறைமுகமாக விமர்சித்த டுபிளசிஸ்.. ஆர்சிபி அணியில் பிளவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+