For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்தா இப்படி நடக்குமா? ஒரே நாளில் செலிபிரிட்டி ஆன குடும்ப பெண்

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க வந்த சிஎஸ்கே ரசிகை ஒருவர் ஒரே நாளில் செலிபிரிட்டி அந்தஸ்தை பெற்ற சம்பவம் தற்போது நடைபெற்றிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது கேமிரா மேன்கள் கிரிக்கெட் வீரர்களை காட்டுகிறார்களோ இல்லையோ போட்டியை பார்க்க வரும் பெண்களை படம் பிடித்து காட்டுவார்கள்.

இதில் ஒவ்வொரு சீசனிலும் பலர் பிரபலமாக இருக்கிறார்கள். ஒரு சிலர் மீம் கிரியேட்டர்ஸ்க்கு டெம்ப்ளட் ஆகும் மாறி இருக்கிறார்கள். இதனால் போட்டியை பார்க்க போகும் எண்ணம் இருந்தால் கண்ணாடி முன் நின்று க்யூட்டாக உணர்ச்சிகளை வெளிப்படுத்த ட்ரைனிங் எடுத்துச் சென்று கொள்ளுங்கள்.

Family girl who watched csk match in chepauk become celebraty in over night

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை பார்க்க வந்த சென்னை பெண் ஒருவர் கழுத்தில் விசில் மாட்டிக் கொண்டு சென்னை வீரர் பில்டிங்கை மிஸ் செய்த போது அச்சோ! என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

இதனை கேமரா மேன் பதிவு செய்து ரீப்ளேவில் காட்ட நம்மவர்கள் அந்த குடும்பப் பெண்ணை ஒரே நாளில் செலிபிரிட்டியாக மாற்றிவிட்டார்கள். இதை அடுத்து அந்தப் பெண் யார் என்று சமூக வலைத்தளத்தில் தேடத் தொடங்கி அவருடைய இன்ஸ்டாகிராம் ஐடியை கண்டுபிடித்து விட்டார்கள்.இன்று ஒரே நாளில் அந்த பெண்ணுக்கு ஏகப்பட்ட பாலோவர்ஸ் வந்திருக்கிறார்கள்.

Family girl who watched csk match in chepauk become celebraty in over night

இதனை பார்த்த ஆண்கள் ரசிகர்களும் நாங்களும் தான் போட்டியை பார்க்க போனோம். ஆனால் நம்மை யாருமே காட்ட மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே தங்களது இயலாமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் சாதாரண குடும்ப பெண்களை மேட்ச் பார்க்க விடுங்கள். இதுபோன்று அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் சென்று தொல்லை கொடுக்காதீர்கள் என அறிவுரையும் வழங்கி வருகிறார்கள்

குடும்பப் பெண்களுக்கு இதே போன்ற புகழ் திடீரென்று வந்தால் அது அவர்கள் வாழ்க்கைக்கு ஆபத்தாகவும் முடியலாம் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இப்படி டிவியில் பார்த்த ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து பின் தொடர்வதெல்லாம் ஸ்டாக்கிங் வகையில் சேரும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, May 12, 2023, 12:49 [IST]
Other articles published on May 12, 2023
English summary
Family girl who watched csk match in chepauk become celebraty in over night சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்தா இப்படி நடக்குமா? ஒரே நாளில் செலிபிரிட்டி ஆன குடும்ப பெண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+