"பொடனி"யில் கோஹ்லியின் ‘முகத்தை’ சுமந்தபடி திரியும் ‘தெறி’ ரசிகர்!
மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகர் ஒருவர், அவரது முகத்தை தனது பின்னந்தலை முடியில் செதுக்கி ஸ்டைலாக வலம் வருகிறார்.
உலகம் முழுவதுமே தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களை ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர். அதிலும், இந்தியர்கள் மற்றவர்களில் இருந்து இன்னும் ஒருபடி மேலே போய், கோயில் கட்டியே வழிபட்டு வருகிறார்கள். சச்சினை கிரிக்கெட் கடவுள் என்றே ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
அந்தவகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகரான ஹக்கீம் மஹோத்தா என்பவர் தனது பாசத்தை தலையில் காட்டியுள்ளார். அதாவது கோஹ்லியின் முகத்தைப் போன்று இவர் தனது பின்னந்தலையில் முடியால் செதுக்கியுள்ளார்.
தனது இந்த ஹேர் ஸ்டைல் குறித்து ஹக்கீம் கூறுகையில், "அவர் ஒரு கிரேட் வீரர்'' என்கிறார். ஐபிஎல் தொடரின் தாக்கத்தால் இவர் இந்த வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறியதாகத் தெரிகிறது.
ஹக்கீமின் இந்த வித்தியாசமான ஹேர் ஸ்டைலைப் பார்த்து, தற்போது மற்றவர்களும் அதேபோன்று விராட் ஹேர்ஸ்டைலுக்கு மாறி வருகின்றனராம்.
ஹக்கீம் தலையில் கோஹ்லி வடிவத்தை செதுக்கியவர் மகேந்திர பிரமணிக் என்ற ஓவியர். ஹக்கீம் மூலம் கிடைத்துள்ள விராட் ஹேர்ஸ்டைல் வரவேற்பால், தற்போது இவர் முழு நேர சிகை அலங்கார நிபுணராக மாறிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications