Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என் முகத்தை காட்டாதீங்க; பொண்டாட்டி பிச்சுடுவா" - MI vs KKR மேட்சில் ரசிகரின் "சேட்டை"

அபுதாபி: ,மும்பை - கொல்கத்தா அணிகள் இடையேயான இன்றைய ஆட்டத்தில், ரசிகர் ஒருவரின் சேட்டை செயல் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இன்று (செப்.23) ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

fan getting trolled for elope the office work and watching cricket in mi vs kkr match

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ரோஹித் ஷர்மா, இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கியுள்ளார். மும்பை அணியில், குயின்டன் டி காக் (w), ரோஹித் சர்மா (c), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, கைரன் பொல்லார்ட், க்ருனால் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதே போல், கொல்கத்தா அணியில், ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் த்ரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்கன் (c), தினேஷ் கார்த்திக் (w), ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதில், மும்பை அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சுனில் நரைன் ஓவரில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில், இந்த போட்டியில் ரசிகர்கள் ஒருவர் காட்டிய பதாகை தற்போது வைரலாகியுள்ளது. அதில் ஒருவர் கையில் ஒரு பதாகையை ஏந்தி போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். அதில், "என் முகத்தை கேமராவில் காட்டிவிடாதீர்கள். நான் தற்போது வேலை செய்து கொண்டிருப்பேன் என்று அவள் நினைத்துக் கொண்டிருப்பாள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் அப்படி குறிப்பிட்டதாலோ என்னவோ, கேமராக்கள் அவரையே மொய்த்துக் கொண்டிருந்தன. இதனால், இந்நேரம் நிச்சயம் மனுஷன் மனைவியிடம் சிக்கியிருப்பார். இதனை குறிப்பிட்டு பல ரசிகர்களை அந்த நபரை கலாய்த்து வருகின்றனர். "எவ்ளோ வயதானாலும், கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம் மட்டும் குறைவதில்லை" என்றும், "நல்ல வேலை.. உங்க மனைவி இன்று எங்காவது உங்களை வெளியே அழைத்து அதை மறுத்து பொய் சொல்லிவிட்டு நீங்க மேட்ச் பார்க்க வந்திருப்பது தெரியவந்தால் உங்கள் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்" என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, September 23, 2021, 21:05 [IST]
Other articles published on Sep 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+