Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழகிற்கு இலக்கணம் அவள்! இந்தியா, நியூசிலாந்து போட்டியை பார்க்க வந்த பெண் டிரெண்டிங்

தர்மசாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க வந்த பெண் ஒருவர் திடீரென்று டிரெண்ட் ஆனார். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் எப்போதுமே வீரர்களை காட்டுவதை விட மைதானத்திற்கு வந்துள்ள அழகான பெண்களை கேமராமேன்கள் காட்டுவது அதிகம்.

இப்படி கேமராவில் காட்டப்பட்டு பின் பிரபலமான பெண்கள் பலர் இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டி ஒன்றில் பெங்களூர் அணி விளையாடிய போட்டியை பார்க்க வந்த பெண் ஒருவர் தேசிய அளவில் ட்ரெண்டானார்.

Fan Girl became Famous after came to watch india vs new zealand game

இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போட்டியை பார்க்க வந்த குடும்பப் பெண்ணும் ட்ரெண்டான நிலையில் தர்மசாலாவில் இந்தியாவும் நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் முதல்முறையாக நெருக்கடிக்கு இந்திய அணி ஆளாகி வருகிறது. ஆனால் ரசிகர்கள் எல்லாம் அதைப் பற்றி கவலையே படவில்லை.

ஏனென்றால் போட்டியை பார்க்க வந்த பெண் ஒருவர் செம க்யூட்டாக பார்பி டால் போல் இருந்தார். இதனைப் பார்த்தவுடன் ரசிகர்கள் போட்டியை மறந்து விட்டு அந்தப் பெண்ணை கொண்டாட தொடங்கி விட்டார்கள். மேலும் அந்தப் பெண் யார் என்று தற்போது சமூக வலைத்தளத்தில் தேட தொடங்கி விட்டார்கள். பல பாலிவுட் ஹாலிவுட் ஹீரோயின்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அந்த பெண் அழகாக இருப்பதாகவும் அவருக்கு நிச்சயம் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Fan Girl became Famous after came to watch india vs new zealand game

இந்த நிலையில், அந்த பெண்ணுடன் அவருடைய ஆண் நண்பரும் வந்திருந்தார். இதனால் அந்த ஆண் நண்பரையும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். மேலும் சிலர் அந்தப் பெண்ணை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அவருக்கு ஆள் இருக்கிறது என்றும் சமூக வலைதளத்தில் லொள்ளு செய்து வருகிறார்கள்.ரசிகர்களின் இந்த செயலை பார்க்கும்போது மேட்சில் இந்தியா அடி வாங்கிக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அந்தப் பெண்ணை பார்த்து ஜொள்ளு விடுவது மார்க் ஆண்டினி படத்தில் வந்த எஸ் ஜே சூர்யாவின் அவன் கிடக்கிறான் என்ற காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

Story first published: Sunday, October 22, 2023, 18:11 [IST]
Other articles published on Oct 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+