For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை நடைபெறுகிறது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம்..யார் அதிக விலைக்கு செல்வார்.. முழு விவரம்

மும்பை : மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் பெற்ற மகளிர் பரமீயர் லீக் தொடருக்கான ஏலம் நாளை மும்பையில் நடைபெறுகிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பார்ப்ரோன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெறும்.

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல், பெங்களூர் , அகமதாபாத் , லக்னோ ஆகிய அணிகள் பங்கேற்கிறது. இதில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியவை ஐபிஎல் ஆடவர் அணிகளை வைத்துள்ள அதே நிர்வாகம் ஆகும்.

நேரம் மற்றும் ஓடிடி

நேரம் மற்றும் ஓடிடி

மகளிர் அணிகளை ஏலத்தில் விற்றது மூலம் பிசிசிஐக்கு 4669 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த தொடரில் ரசிகர்களின் அபிமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பங்குபெறவில்லை மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இந்திய நேரப்படி மதியம் 2:30 மணிக்கு இந்த ஏலம் தொடங்க உள்ளது. இதனை ஜியோ சினிமா ஆப்பில் நேரலையாக பார்க்கலாம். இந்த ஏலத்திற்காக உலகம் முழுவதும் 1525 வீராங்கனைகள் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருந்தார்கள்.

அதிக விலை யாருக்கு?

அதிக விலை யாருக்கு?

ஆனால் இறுதிப்பட்டியலில் மொத்தம் 409 வீராங்கனைகள் தான் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் 246 வீராங்கனைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 163 வீராங்கனைகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக 50 லட்சம் ரூபாய்க்கு 24 வீராங்கனைகள் தங்களுடைய பெயரை பதிவு செய்துள்ளார்கள். இதில் 14 வெளிநாட்டு வீராங்கனைகளும் 10 இந்திய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, அண்டர் 19 உலக கோப்பையை வென்ற செபாலி வெர்மா போன்ற இந்திய வீராங்கனைகள் அதிக விலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவிடும் தொகை

செலவிடும் தொகை

அலிசா ஹெலி, எல்சி பேரி, சோபி எஸ்லெஸ்டோன், சோபி டெவைன் போன்ற வெளிநாட்டு வீராங்கனைகளும் தங்களுடைய விலையை அதிகபட்ச தொகையாக 50 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீராங்கனைகள் அதிகளவில் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.ஒவ்வொரு மகளிர் அணியும் ஏலத்தில் அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் வரை வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க செலவிடலாம்.

ரூல்ஸ் என்ன?

ரூல்ஸ் என்ன?

ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 15 வீராங்கனைகளாகவும், அதிகபட்சம் 18 வீராங்கனைகளையும் தேர்வு செய்ய வேண்டும். நாளை நடைபெறும் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் ஏலத்தில் தேர்வு செய்யப்படலாம். ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 5 வெளிநாட்டு வீராங்கனைகளை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாம். ஆனால் இது ஒரு ட்விஸ்ட் உள்ளது. இதில் நான்கு வெளிநாட்டு வீராங்கனைகள் முக்கிய உறுப்பினர் நாடுகளை சேர்ந்தவர்களாகவும், ஒரு வீராங்கனை அசோசியேட் உறுப்பினர்களை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

Story first published: Sunday, February 12, 2023, 16:46 [IST]
Other articles published on Feb 12, 2023
English summary
fans are ready to witness the historic Women Premier League auction நாளை நடைபெறுகிறது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம்..யார் அதிக விலைக்கு செல்வார்.. முழு விவரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+