Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட்டோட கவர்ச்சிக்கு முக்கிய காரணம் அதுதாங்க... ரோகித் சர்மா சிலாகிப்பு

டெல்லி : விளையாட்டோட கவர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது ரசிகர்கள்தான் என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

லா லிகாவின் பேஸ்புக் லைவ் சாட்டில் தொகுப்பாளர் ஜோ மாரிசனின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய ரோகித் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று ஜோ மாரிசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

பேஸ்புக் லைவ் சாட்டில் பேச்சு

பேஸ்புக் லைவ் சாட்டில் பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, லா லிகாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திற்காக லைவ் சாட்டில் தொகுப்பாளர் ஜோ மாரிசனின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவரிடம் கிரிக்கெட் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவை அனைத்திற்கும் பொறுமையாக ரோகித் சர்மா பதிலளித்து பேசினார்.

முக்கிய காரணம் ரசிகர்கள்தான்

முக்கிய காரணம் ரசிகர்கள்தான்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் சிறிது காலத்திற்கு ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோ மாரிசன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, விளையாட்டில் தீப்பொறி பறக்க காரணமானவர்கள் ரசிகர்கள் என்றும், விளையாட்டின் கவர்ச்சிக்கு காரணமாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

ரோகித் சர்மா வேண்டுகோள்

ரோகித் சர்மா வேண்டுகோள்

ஒவ்வொரு விளையாட்டிற்கும் ரசிகர்கள் முக்கிய தேவையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள ரோகித் சர்மா, முதலில் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு விளையாட்டை காலி மைதானங்களில் துவக்கிவிட்டு, பின்பு சிறிது சிறிதாக ரசிகர்களை மைதானங்களில் அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வழிமுறைகளில் கவனம்

பாதுகாப்பு வழிமுறைகளில் கவனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரத்தில் ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து போட்டிகள் துவங்கப்பட்டுள்ளன. இதேபோல ஸ்பெயினின் லா லிகா போட்டிகளை துவங்க அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு இவை நடத்தப்பட உள்ளன.

Story first published: Sunday, May 24, 2020, 10:40 [IST]
Other articles published on May 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+