Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவில் உள்ள 3 வீரர்களுக்கு எதிராக ரசிகர்கள் போர் கொடி.. உடனே மாற்றுங்கள் என வலியுறுத்தல்

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக சென்னை அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஐந்தில் வெற்றி நான்கில் தோல்வியை தழுவி மொத்தம் 10 புள்ளிகளுடன் உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அணியில் இடம் பெற்றுள்ள இலங்கை சுழற் பந்துவீச்சாளர் தீக்சனா சிறப்பாக பந்து வீசக் கூடியவர்.

Fans asks csk Management to change the three players from playing xi

நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் எல்லாம் அவர் பந்து வீசிய விதம் சென்னை ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக பந்து வீசி வருகிறார். நான்கு ஓவர் வீசி கிட்டத்தட்ட 35 ரன்கள் கொடுக்கிறார். மேலும் பில்டிங்கிலும் அவர் மோசமாக செயல்படுகிறார்.

இதன் காரணமாக தீக்சனாவை நீக்கிவிட்டு நியூசிலாந்து வீரர் சாண்ட்னரை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை போன்று மொயின் அலியும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இதனால் அவரை நீக்கிவிட்டு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று தீபக் சாஹரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ள சிஎஸ்கே வீரர்கள் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரிய மைனஸ் ஆக சிஎஸ்கே அணிக்கு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் துசார் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக தீபக் சாஹரை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அப்படி தீபக் சாஹர் உடல்நிலை சரியில்லை என்றால் அவருக்கு பதிலாக வேறு ஏதேனும் மாற்று வீரரையாவது சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது சிஎஸ்கே அணிக்கு எஞ்சி உள்ள 5 போட்டிகளில் குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, May 1, 2023, 11:13 [IST]
Other articles published on May 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+