ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ, ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் 155 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தானுக்கு லக்னோ நிர்ணயித்தது. இதில் கே எல் ராகுல் வழக்கம் போல் மெதுவாக விளையாடினார்.இதனை அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் எப்போதும் அதிரடியாக விளையாடும் ஜாஸ் பட்லர் 41 பந்துகளை குறித்து 40 ரன்கள் தான் அடித்தார்.

இது ரசிகர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனை கிண்டல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் ராகுலை கலாய்த்து இருக்கிறார்கள். ஜாஸ் பட்லர் ஏன் இப்படி ஒரு இன்னிங்ஸ் ஆடிட்டு போறான் என கேட்பதாகவும், அதற்கு சங்ககாரா உன்னுடைய இன்னிங்ஸ் பார்த்தா உன்ன மாதிரி தான் விளையாடுவான் என்று பதில் சொல்வது போலவும் போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

நேற்றைய ஆட்டத்தில் கே எல் ராகுல் டிரண்ட் போல்டின் முதல் ஓவரில் எதிர்கொண்டார். இதில் ஒரு ரன்கூட ராகுல் அடிக்கவில்லை. ஐபிஎல் தொடரின் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 27 முதல் ஓவர்கள் மைடனாக இருந்திருக்கிறது. இதில் ராகுல் மட்டும் 11 முறை பேட்டிங்கில் இருந்திருக்கிறார். இப்படி ஒரு பொய் stats உருவாக்கி, ராகுலை ரசிகர்கள் கிண்டல் அடித்துள்ளனர். இதனை உண்மை என்று பலரும் நம்பினர். நேற்று ராகுல் இப்படி விளையாடியவுடன் ரசிகர்கள் சிலர் பழைய ராகுல் வந்து விட்டார் என கிண்டல் செய்தனர். இதைப் பார்த்து ராகுலை கடுப்பாகி யாருடா அது வின்டேஜ் ராகுல் பேக்னு கூட்டத்துல கத்துறது என வடிவேல் கேட்பது போல் மீம்ஸ் போட்டு இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த சமூக வலைதளமும் ஒரு வீரரை போட்டு குமுறுகிறது என்றால் அது ராஜஸ்தான் ராயல்ஸை சேர்ந்த ரியான் பராக்கை தான். களத்தில் திமிராக நடந்து கொள்வது. தன்னை பற்றி தானே பெருமையாக பேசுவது என ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகும் ரியான் பராக் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதனால் அவரை கிண்டல் செய்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் கூட ரியான் பராக் 12 பந்துகளை எதிர் கொண்டு 15 ரன்கள் தான் சேர்த்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக ரியான் பராக்கிற்கு சரியான வேலை பேட்டிங் கிடையாது சீர் லீடர்ஸில் பெண்களுடன் சேர்ந்து ஆடுவது தான் என போட்டோ போட்டு கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

இதேபோன்று ரசிகர்களின் கோபத்திற்கு தொடர்ந்து ஆளாகி வரும் ரியான் பராக் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெறுக்கத்தக்க வீரர் என்றால் இவர்தான் என பதிவிட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு விருது கிடைத்தால் 100 ரூபாய் பரிசை ரியான் பராக் தான் வெல்வார் எனும் கடுமையாக மீம் கிரியேட்டர்ஸ்கள் சாடி இருக்கிறார்கள்.

இதேபோன்று ரியான் பராக் தன்னை தோனி லெவலுக்கு ஒரு ஃபினிஷர் என தம்பட்டம் அடித்து வருகிறார். அதனை கிண்டல் செய்யும் விதமாக ரியான் பராக் ஒரு நல்ல ஃபினிஷர் தான். ஒரு நாள் ராஜஸ்தான் அணியை ஒட்டுமொத்தமாக அவர் முடித்து விடுவார் என கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்கள்.