Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ-ன் பண ஆசையால் பறிபோன 5வது டெஸ்ட்.. தோல்விக்கு பின்னால் உள்ள காரணம் - ரசிகர்கள் கொந்தளிப்பு!

பெர்மிங்கம்: பிசிசிஐ -ன் பண ஆசையால் தான் இன்று இங்கிலாந்து தொடரை வெல்ல முடியாமல் போனதாக ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Recommended Video

Indian Team-க்கு 8th Captain! Kohli முதல் Dhawan வரை | Aanee's Appeal | *Cricket

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து தோல்வியே சந்திராத இந்திய அணி முதன்முறையாக தோற்றது.

 பிசிசிஐ தவறான முடிவு

பிசிசிஐ தவறான முடிவு

இப்படிபட்ட தோல்விக்கு காரணம் பிசிசிஐ எடுத்த தவறான முடிவு தான் என சர்ச்சை எழுந்துள்ளது. கடந்தாண்டு தொடங்கிய இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் 4 போட்டிகளில் 2 - 1 என முன்னிலை பெற்றிருந்தது. இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜ் என மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்ததால், தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருந்தன.

ஒத்திவைக்கப்பட்ட போட்டி

ஒத்திவைக்கப்பட்ட போட்டி

அதன்பின் தான் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியாகி, கடைசி போட்டி ஒத்திவைக்கப்பட்டது. விடுபட்ட போட்டியை அடுத்த ஒருவாரத்திற்குள் வைத்துக்கொள்ளலாம் என இங்கிலாந்து தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகும் பிசிசிஐ அதனை ஏற்கவில்லை. இதற்கு காரணம் ஐபிஎல் தொடர்.

என்ன காரணம்

என்ன காரணம்

அந்த சமயத்தில் தான் 2021ம் ஆண்டின் 2வது பகுதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருந்தது. இந்திய வீரர்கள் அங்கு செல்ல வேண்டும் என்பதால், 5வது டெஸ்ட் போட்டியை ஒராண்டிற்கு தள்ளிப்போட்டனர். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மட்டும் முக்கிய வீரர்கள் இல்லாமல் நடத்தியிருக்கலாம். ஆனால் வருமான பாதிப்பு ஏற்படும் என்பதால் சர்வதேச கிரிக்கெட்டை பிசிசிஐ அப்போது விட்டுக்கொடுத்துவிட்டது.

 குவியும் விமர்சனம்

குவியும் விமர்சனம்

ஐபிஎல் தொடரின்மீது கவனம் செலுத்தி சர்வதேச கிரிக்கெட்டை பிசிசிஐ வீணாக்குகிறது என விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது பிசிசிஐ-ன் பண ஆசையால் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போட்டி கையை நழுவிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 6, 2022, 11:25 [IST]
Other articles published on Jul 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+