Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சாதனையை கோலி எட்டுவதை தடுக்கிறதா பிசிசிஐ? ஒருநாள் கிரிக்கெட்டில் வேண்டுமேன சேர்க்கவில்லையா?

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய விராட் கோலி அந்த தொடரில் 50 ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து சச்சின் சாதனையை முறியடித்தார்.இந்த நிலையில் விராட் கோலி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால் இதன் உண்மைத்தன்மை என்ன என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் அணிக்காக விளையாடுவது தான் என்னுடைய முதல் நோக்கம். என் அணி வெற்றி பெற வைக்க நான் எவ்வளவு வேண்டுமானாலும் கடுமையாக உழைப்பேன் என்று விராட் கோலி கூறுவருவதுண்டு.

 Fans Blast BCCI as they are safeguarding sachin record by not giving chance to kohli

இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி நான் விளையாட மாட்டேன் என விராட் கோலி சொல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விராட் கோலி தற்போது டெஸ்டில் 29 சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதம், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் 80 சதம் அடித்து இருக்கிறார்.

முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 100% உள்ளார். இந்த நிலையில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து விடக்கூடாது என்பதற்காக அவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து பிசிசிஐ நீக்கி விட்டதா என்று அவருடைய ரசிகர்கள் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள். விராட் கோலி ரசிகர்களின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தன்னுடைய ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டால் அதற்கு சச்சின் டெண்டுல்கரும் அதை ஒரு இந்தியர் உடைத்தால் என்றார்.அதனை பிசிசிஐ கொண்டாடவும் தயாராக தான் இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் விராட் கோலி விளையாடினால் அந்தத் தொடரின் மதிப்பு வேற லெவலுக்கு சென்று விடும்.

இதன் மூலம் வருமானம் இரட்டிப்பாக கூட கிடைக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.இதனால் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்திற்காக விராட் கோலியை யாரும் விளையாட வேண்டாம் என்று சொல்லி இருக்க மாட்டார்கள் என்றும் இது விராட் கோலியின் தனிப்பட்ட முடிவாக தான் இருந்திருக்கும் என்றும் உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Sunday, December 3, 2023, 5:40 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+