Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை கட்டி பிடித்து செல்ஃபி.. “உம்மா” கொடுக்கவும் முயற்சி.. ரசிகர் சேட்டை #IndvsWI

Recommended Video

கோஹ்லியை பார்க்க மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்- வீடியோ

ஹைதராபாத் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்தார்.

கேப்டன் விராட் கோலியோடு செல்ஃபி எடுக்கவே இந்த ரசிகர் இப்படி எகிறி குதித்துள்ளார். இதனால், போட்டியில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டது.

இது போன்ற ரசிகர்களின் அத்துமீறல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

எகிறி குதித்த ரசிகர்

எகிறி குதித்த ரசிகர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பீல்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியின் போது 15 ஓவர்கள் முடிந்த நிலையில், ஒரு ரசிகர் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி விட்டு மைதானத்துக்குள் எகிறி குதித்து ஓடி வந்தார்.

கட்டி பிடித்து அட்டகாசம்

கட்டி பிடித்து அட்டகாசம்

கோலி அருகே வந்து அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார். கோலி தள்ளிப் போக முயன்றும் அந்த ரசிகர் விடுவதாக இல்லை. இன்னும் கொஞ்சம் ஓவராக கன்னத்தில் முத்தம் கொடுக்க வேறு முயன்றார். கோலி வெறுப்பில் இருக்க, நல்லவேளையாக பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து அந்த ரசிகரை இழுத்துச் சென்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில் இப்படியெல்லமா செய்வீர்கள்? என பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் கடுப்பாகினர்.

முதல் டெஸ்ட் போட்டியிலும்

முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. அங்கேயும் இதே போல இரண்டு ரசிகர்கள் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து கோலியோடு செல்ஃபி எடுத்தனர். இது போன்ற சம்பவங்கள் சர்வதேச போட்டிகளில் தேவையற்ற நேர விரயத்தை ஏற்படுத்துவதுடன், வீரர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

பாதுகாப்பு அச்சுறுத்தல்

இதற்கு முன்பு தோனி கேப்டனாக இருந்த போது இது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. தற்போது, கோலியும் ரசிகர்கள் அத்துமீறல் பிரச்னையில் சிக்கி வருகிறார். பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற கோணத்தில் இந்த பிரச்சனையை அணுகி விரைவில் பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Story first published: Friday, October 12, 2018, 14:16 [IST]
Other articles published on Oct 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+