Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் நடுவர்களின் 2 மெகா தவறுகள்? சிஸ்கே, மும்பைக்கு சாதகமாக முடிவு- ரசிகர்கள் புகார்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடுவர்கள் தவறான முடிவை எடுப்பதும் அது பிறகு சர்ச்சை ஆவதும் சிந்துபாத் கன்னித்தீவு போல் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. நடுவர்கள் முடிவை சரியாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

கள நடுவர்கள் தவறு செய்தால் அதனை சரி செய்வதற்காக மூன்றாம் நடுவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அது அவுட்டா? இல்லை நாட் அவுட்டா என முடிவெடுப்பார்கள். ஆனால் அப்படி இருந்தும் மூன்றாம் நடுவர்களும் தவறு செய்யும் பழக்கம் நடைபெறுகிறது.

Fans claims third umpire commits two biggest mistakes in a day

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு பெரிய அணிகளுக்கு சாதகமான முடிவு மூன்றாம் நடுவர் வழங்கி விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில் 19.4 வது ஓவரில் ஜித்தேஷ் சர்மா அடித்த பந்தை ஷாயிக் ரசித், பௌண்டரியில் கேட்ச் பிடித்து சறுக்கி விழுந்தார்.

அப்போது அவருடைய கால் எல்லைக்கோட்டில் பட்டது போல் தெரிந்தது. ஆனால் எல்லைக்கோடில் பட்டதற்கான சான்றுகள் இல்லை என கூறி மூன்றாம் நடுவர் அதற்கு அவுட்டு கொடுத்து விட்டார். எனினும் அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 19 புள்ளி 4வது ஓவரில் ஹர்ஷத் கான் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முயன்றார்.

அது கேட்ச் ஆனது. எனினும் இடுப்புக்கு மேல் பந்து வந்ததாக கூறி ஜெயஸ்வால் டி ஆர் எஸ் அவுட் ஆனால் ஜெய்ஸ்வாலுடன் இடது கால் கொஞ்சம் கீழே சாய்ந்து இருந்தது. இதன் காரணமாக ஜெய்ஸ்வாலின் உயரம் குறைவாக இருந்ததாக கூறி இது நோபல் கிடையாது என நடுவர்கள் கூறிவிட்டனர். இதனால் மிச்சம் உள்ள இரண்டு பந்துகளை பிடிக்காமல் ஜெய்ஸ்வால் சென்று விட்டார். இது இரண்டிலும் மூன்றாம் நடுவர்கள் தவறு செய்து விட்டதாக கூறி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Sunday, April 30, 2023, 23:50 [IST]
Other articles published on Apr 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+