Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்ன பீலிங்கா.. எனக்கு தான்டா பீலிங்கு" ரோகித் சர்மாவை வெளுக்கும் தெறி மீம்ஸ்.. புலம்பும் பல்தான்ஸ்

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fans created some Stunning Memes in Social Media After Punjab defeats Mumbai by 13 Runs

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா சிறப்பாக பந்துவீசினார். 3 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை சென்னை 28 படத்தில் வரும் அரசியல்வாதி சண்முக சுந்தரம், "கிரிக்கெட்டுக்கு ஒரு டெண்டுல்கர்.. அரசியலுக்கு நான்" என்று பேசி இருப்பார். அதனை மாற்றி, "தோனிக்கு ஒரு ஜடேஜா.. ரோகித்துக்கு நான்" என்று பியூஷ் சாவ்லா பேசுவது போல் உருவாக்கப்பட்ட மீம் அட்டகாசம்.

Fans created some Stunning Memes in Social Media After Punjab defeats Mumbai by 13 Runs

நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். 26 பந்துகளில் 57 ரன்கள் குவித்து சூர்யகுமார் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். க்ரீன் - சூர்யகுமாரின் பார்ட்னர்ஷிப் மிரட்டலாக அமைந்தது. இதனை வைத்து சர்தார் படத்தில் கார்த்தியிடம் குழந்தை, இப்போ என்ன பண்ணப் போறோம் என்ற கேள்விக்கு, கார்த்தி தரப்பில், பத்தவச்சு பறக்கவிடப் போறேன் என்று பதில் அளிக்கப்படும். அதில் குழந்தையாக க்ரீனையும், கார்த்தியாக சூர்யகுமார் யாதவையும் வைத்து உருவாக்கியுள்ள மீம் அதிரடி.

Fans created some Stunning Memes in Social Media After Punjab defeats Mumbai by 13 Runs

அதேபோல் மும்பை அணியின் இளம் வீரர் கேமரூன் க்ரீன் 43 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். அவர் அடிக்க ஒரு சிக்சர் 114 மீ தூரம் வரை சென்றது. இவரது அதிரடி ஆட்டத்தை கத்தி படத்தில் வரும் காயின் சண்டைக் காட்சியுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் சரவெடி ரகம்.

Fans created some Stunning Memes in Social Media After Punjab defeats Mumbai by 13 Runs

அதேபோல், கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா விக்கெட்டை ஸ்டம்புகளை உடைத்து கைப்பற்றினார். இதனை மாஸ்டர் படத்தில் வரும் விஜயின் இடைவேளை சண்டைக் காட்சியில் கண்ணாடிகள் சிதறடிக்கப்படும் காட்சியோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fans created some Stunning Memes in Social Media After Punjab defeats Mumbai by 13 Runs

பஞ்சாப் அணியின் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் நடுவே ரோகித் சர்மா தனது விரலை வாயில் வைத்து அமர்ந்திருந்தார். அது அவர் யோசித்து கொண்டிருப்பது போல் இருந்தது. அதனை பிரண்ட்ஸ் படத்தில் வரும் விஜய், கடிகாரத்தை உடைத்த பின் யோசிக்கும் போது வரும் வடிவேலு, "என்ன ஃபீலிங்கா.. எனக்கு தான்யா ஃபீலிங்கு.." என்று பேசி இருப்பார். அதனை வடிவேலுவாக மும்பை ரசிகர்களையும், விஜயாக ரோகித் சர்மாவையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

Story first published: Sunday, April 23, 2023, 7:31 [IST]
Other articles published on Apr 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+