Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"உனக்கு எமன் நான்தான்டா" பஞ்சாப்னு பேர் கேட்டாலே அடிக்கும் டிவாட்டியா.. ரசிகர்களின் அசத்தல் மீம்ஸ்!

மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தப் போட்டிக்கு பின் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fans created stunning memes after Gujarat Beat Punjab by 6 wickets in IPL 2023

2022ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்தில் 2 சிக்சர்கள் விளாசி ராகுல் டிவாட்டியா குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி விளாசி ஆட்டத்தை குஜராத் அணிக்கு சாதகமாக முடித்து கொடுத்தார். இதனை வைத்து திருப்பாச்சி படத்தில் வரும் விஜய், வில்லனிடம் "உனக்கு எமன் நான்தான்டா" என்று சொல்லும் வசனத்தை, பஞ்சாப் அணியை பார்த்து ராகுல் டிவாட்டியா, " உனக்கு எமன் நான்தான்டா" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்

Fans created stunning memes after Gujarat Beat Punjab by 6 wickets in IPL 2023

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்களை ரிங்கு சிங் விளாசியதால், குஜராத் அணி தோல்வியடைந்தது. இதனால் அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் மோகித் சர்மா சேர்க்கப்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர், 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் யாஷ் தயாள், அய்யயோ என்று அழுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

Fans created stunning memes after Gujarat Beat Punjab by 6 wickets in IPL 2023

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் ராஜபக்சே 26 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். 15 ஓவர்கள் கடந்தும் டாட் பந்துகளை விளையாடியது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது. இதனை கிண்டல் செய்யும் வகையில், பேருந்தில் சடலத்தை கொண்டு வந்து வடிவேலுவை ஒருவர் ஏமாற்றி பணம் வாங்குவார். அதில் பணம் பெற்றபின் சடலமாக நடித்தவரை எழுந்திருக்க சொல்லுவார் அந்த நடிகர். அதுபோல் ராஜபக்சேவை, "யோவ் டெத் ஓவர்ஸ் வந்திருச்சு எந்திரியா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல் ரகம்.

Fans created stunning memes after Gujarat Beat Punjab by 6 wickets in IPL 2023

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களம் புகுந்த ராகுல் டிவாட்டியா பவுண்டரி அடித்து குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார். குஜராத் அணியின் சேஸிங்கின் போது டிவாட்டியா பல்வேறு போட்டிகளிலும் இதுபோல் காப்பாற்றியுள்ளார். இதனை குறிப்பிட்டு, வடசென்னை படத்தில் ராதாரவியிடம் கிஷோரை அறிமுகம் செய்யும் அமீர், "என் புள்ளங்கள்ளயே இவன் தான்டா ரொம்ப ஷார்ப்" என்று சொல்லுவார். அதில் கிஷோராக ராகுல் டிவாட்டியாவையும், அமீராக ஹர்திக் பாண்டியாவையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் அதகளம்.

Fans created stunning memes after Gujarat Beat Punjab by 6 wickets in IPL 2023

குஜராத் அணியின் பந்துவீச்சின் போது மோகித் சர்மா வீசிய பந்து ஜித்தேஷ் சர்மா பேட்டில் பட்டு சென்றது. ஆனால் பந்துவீச்சாளருக்கே அந்த சத்தம் கேட்கவில்லை. ஆனால் தைரியமாக சாஹா, கேப்டன் ஹர்திக்கிடம் ரிவ்யூ எடுக்க வற்புறுத்தினார். கடைசி நொடியில் ரிவ்யூ எடுத்த நிலையில், ஜித்தேஷ் சர்மா அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இதனை பாராட்டும் வகையில் கில்லி படத்தில் வரும் தாமு பேசும், ஓட்டேரி நரி பேர்லே எழுதுங்கோ என்ற வசனத்தை மாற்றி "WRS" என்றும், விருத்திமான் சாஹா ரிவ்யூ சிஸ்டம்னு சொல்லுங்கோ என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆச்சரியம்.

Story first published: Friday, April 14, 2023, 7:51 [IST]
Other articles published on Apr 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+