Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

199வது டெஸ்ட் போட்டியில் 10 ரன்களிலேயே அவுட் ஆன டெண்டுல்கர்

கொல்கத்தா: ஓய்வு பெற உள்ள இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 199வது டெஸ்ட் போட்டியில் 10 ரன்களை மட்டுமே அடித்தது ரசிகர்களை ஏமாற செய்தது.

டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். கொல்கத்தாவில் 199வது போட்டியில் பங்கேற்றார். டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் சதம் அடித்து 33 மாதங்கள் ஆகிவிட்டது.

இதனால் கொல்கத்தா போட்டியிலாவது சதமடிப்பாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் இருந்தனர். ஆனால் டெண்டுல்கர் 10 ரன்களிலேயே அவுட் ஆனார். தமது பந்து வீச்சில் எல்பி.டபிள்யூ முறையில் அவுட் ஆக்கிய மேற்கிந்திய தீவுகளின் ஷேன் ஷில்லிங் ஃபோர்டு பந்துவீச்சில் டெண்டுல்கர் எல்பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனது விசித்திரமாக இருந்தது.

Fans disappointed as Sachin Tendulkar scores just 10 runs in his 199th Test

மொத்தம் 24 பந்துகளை எதிர்கொண்ட டெண்டுல்கர் 10 ரன்களையே எடுத்திருந்தார். இருப்பினும் இந்த அவுட், அம்பயரின் அவசரத்தால் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் சச்சின் டெண்டுல்கர் அவுட்டுகள் இப்படி சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன.

எப்படியோ சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களுடன் 199வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெளியேறிவிட்டார். இருப்பினும் சச்சின் ரசிகர்கள் ஏக்கம் நீடித்தபடியே இருக்கிறது.

Story first published: Friday, November 8, 2013, 10:31 [IST]
Other articles published on Nov 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+