சதம் அடிச்சா தான் மரியாதை போல.. தன்னலமின்றி ஆடிய ஸ்ரேயாசை யாருமே கண்டுக்கல
கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய காரணமாக அமைந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியவர்கள் என்று பார்த்தால் கடினமான ஆடுகளத்தில் முதலில் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்து ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் அதன் பிறகு விராட் கோலியும் ஸ்ரேயாஸ் தான் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.ஸ்ரேயாஸ் ஐயர் நினைத்திருந்தால் கோலியைப் போல் மெதுவாக விளையாடி சதம் அடித்திருக்கலாம். ஆனால் அணியின் ஸ்கோர் சதத்தை விட முக்கியம் என்பதால் ஒரு கட்டத்தில் சுயநலம் இன்றி அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

இதன் காரணமாகவே பெரிய சாட் ஆட முற்பட்டு ஸ்ரேயாஸ் 77 ரன்களில் வெளியேறினார்.ஆனால் விராட் கோலி கடைசி வரை சதம் அடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே மெதுவாக விளையாடி மூன்று இலக்கம் ரன்களை தொட்டார். சச்சினின் சாதனையை அவர் சமன் செய்து விட்டதால் ஒட்டுமொத்த உலகமே தற்போது விராட் கோலியை பாராட்டி வருகிறது.
ஆனால் சதத்தை விட அணியின் ஸ்கோர் தான் முக்கியம் என்று ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரை ரசிகர்கள் யாரும் கண்டுக்க கூட இல்லை. இதுகுறித்து பேசிய தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், ஸ்ரேயாஸ் இன்றைய ஆட்டத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும். முதலில் அவர் 32 பந்துகளில் 11 ரன்கள் தான் சேர்த்திருந்தார்.
ஆனால் அதன்பிறகு அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். முதலில் சில நேரம் அவர் கடுமையான சூழலை எதிர்கொண்டு அதன் பிறகு அரை சதம் கடந்த உடன் அணிக்காக அதிரடியை காட்டினார் என்று டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். இப்படி ரசிகர்கள் சதம் அடித்த வீரர்களை தான் பாராட்டுவார்கள் என்றால், இனி அனைத்து வீரர்களுமே அணியின் ஸ்கோரை விட சதம் தான் முக்கியம் என்று நினைத்து விளையாட தொடங்கி விடுவார்கள். அப்படி ஒரு சூழல் வந்தால் அதற்கு காரணம் ரசிகர்களாக தான் இருப்பார்கள் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications