Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு நற்செய்தி.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து புது தகவல்.. அப்போ சம்பவம் இருக்கு!

மெல்பேர்ன்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வந்துவிட்டதால், சூப்பர் 12 சுற்று மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23ம் தேதியன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

கடந்த டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும், இந்தியாவுடனான ஆதிக்கத்தை தொடர பாகிஸ்தான் அணியும் முணைப்புடன் களமிறங்கவுள்ளன. இந்த முக்கியமான போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்குறுக்கீடு

மழைக்குறுக்கீடு

ஆனால் சமீபத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு 95% இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறைந்தது 5 ஓவர்கள் கூட போட்டியில் வீசப்படாது என்ற அளவிற்கு மதியம் மற்றும் மாலை நேரங்களில் கடும் மழைப்பொழிவு இருக்கும் என அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் வானிலை மாறியிருப்பதால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மழைக்கான வாய்ப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் போட்டி முழுவதுமாக நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேகம் மூட்டம் மட்டும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும், தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசி விதி

ஐசிசி விதி

டி20 உலகக்கோப்பையில் மழைக்குறுக்கிட்டால், முடிவை பெறுவதற்கு குறைந்ததற்கு 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும் என்பது விதி. லீக் சுற்றில் ரிசர்வ் நாளும் இல்லை என்பதால் போட்டி தான் முழுவதும் ரத்து செய்யப்படும். எனவே வானிலை இதே போன்று நன்றாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Story first published: Friday, October 21, 2022, 16:49 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+