
முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்திருந்தது. இங்கிலாந்து அணியோ 284 ரன்களுக்கெல்லாம் அவுட்டானது. இதனால் 132 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. இது தோல்விக்கான முதற்படியாக பார்க்கப்படுகிறது.

சொதப்பிய டாப் ஆர்டர்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 2வது இன்னிங்ஸிலும் சொதப்பினர். எனினும் அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே தனி கவனம் பெற்றுள்ளார். ஏனென்றால் 2 இன்னிங்ஸிலும் அவர் அவுட்டான விதம். ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கிற்கு வந்தவுடனேயே இங்கிலாந்து பவுலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீச தொடங்கினர். இது அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது.

ஸ்ரேயாஸ் திணறல்
ஷார்ட் பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் திணறக்கூடியவர். இதனை மெக்கல்லம் நன்கு அறிந்தவர். அவரின் அறிவுரையின்படியே ஷார்ட் பால் வீசி விக்கெட் எடுத்தனர். 2வது இன்னிங்ஸில் அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாக பெவிலியனில் இருந்து மெக்கல்லம் சைகை காட்டினார். ஆனால் அப்போதோம், ஸ்ரேயாஸால் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள தயாராக முடியவில்லை.

மோசமான அவுட்
சிறிது நேரம் பந்தை மிஸ் செய்து வந்த அவர், திடீரென ஆக்ரோஷமாக அடிக்க நினைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக பேட்டில் எட்ஜாகி கேட்ச்சானார். 26 பந்துகளை சந்தித்த அவர் 19 ரன்களுக்கெல்லாம் வெளியேறி ஏமாற்றினார்.


Click it and Unblock the Notifications











