For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சதம் அடித்தால் கொண்டாட கூடாதா? பிறகு விராட் கோலியை என்ன சொல்றது?தேர்வுக்குழுவுக்கு ரசிகர்கள் கண்டனம்

மும்பை : உலக கிரிக்கெட் அளவில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சர்பிராஸ்கான்.

ஆனால் அவருக்கு ஒரு முறை கூட இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் நிலையில், சர்பிராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Fans Hits back BCCI selectors Explaination for not selecting Sarfaraz khan

ஆனால் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதில் சதம் அடித்து விட்டு களத்தில் துள்ளி குதித்து சர்பிராஸ் கான் கொண்டாடுகிறார். இது வரம்பு மீறிய செயலாகும். மேலும் களத்திலும் களத்திற்கு வெளியிலும் அவருடைய நடவடிக்கை சரியில்லை.

மேலும் உடல் பருமனாக இருக்கிறார். இதனால்தான் நாங்கள் சர்பிராஸ் கானை அணியில் சேர்க்கவில்லை என்று தேர்வுக்குழு விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல் மறுக்கப்படும் வீரர் சதம் அடிக்கும் போது தன்னுடைய கோபத்தை கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Fans Hits back BCCI selectors Explaination for not selecting Sarfaraz khan

விராட் கோலி எல்லாம் சதம் அடித்து விட்டால் வாயில் வயிலின் வாசிப்பது போல் கெட்ட வார்த்தைகள் வரும். மேலும் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். இதனால் விராட் கோலியை அணியை விட்டு நீக்கிவிடுவீர்களா. இது தவறு கிடையாதா விராட் கோலிக்கு ஒரு நியாயம் சர்ப்ராஸ் கானுக்கு ஒரு நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

மேலும் சர்பிராஸ் கான் உடல் எடையை குறைத்து இருக்கிறார். ஒல்லியான வீரன்தான் வேண்டும் என்பதற்கு அவர் என்ன பேஷன் ஷோவிலா கலந்து கொள்ளப் போகிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். சர்பிராஸ்கான் மீது இத்தகைய வெறுப்புடன் பிசிசி ஐ நடந்து கொள்ளத் தேவையில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, June 26, 2023, 9:36 [IST]
Other articles published on Jun 26, 2023
English summary
Fans Hits back BCCI selectors Explaination for not selecting Sarfaraz khan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+