For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘என்ன கொடும சார் இது’.. இந்திய வீரர்களின் உடல் பருமனான புகைப்பட,. இணையத்தை கலக்கும் புகைப்படம்!

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு துறைக்கு வராமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 14ம் தேதி முடிவடைகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டு டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்ஸில் 298 ரன்கள் எடுக்க, அந்த இலக்கினை அடைய முடியாமல் இங்கிலாந்து அணி 151 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி முன்னிலை

இந்திய அணி முன்னிலை

இந்த டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியிடம் பெற்ற மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முணைப்புடன் இங்கிலாந்து தயாராகி வருகிறது. அதே போல வெற்றி பாதையை தொடர் இந்திய அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் சேட்டை

ரசிகர்களின் சேட்டை

இந்த சீரியஸான நேரத்தில் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை வைத்து வேடிக்கை விஷயங்களை செய்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள், உடல் ஃபிட்னஸ் மிகவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியில் உடற்தகுதி முக்கியமான ஒன்று. இதனால் பல்வேறு வீரர்களும் வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்காள் ஒருவேளை விளையாட்டு துறைக்குள் வந்திருக்காவிட்டால் எப்படி இருந்திருப்பார்கள் என கணித்துள்ளனர்.

ஃபிட் டூ ஃபேட்

ஃபிட் டூ ஃபேட்

'ஃபிட் டூ ஃபாட்' என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்திய கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்கள் உடற்பருமனாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. அதில் முகத்தில் சற்று சதைகள் இருக்குமாறும், நிஜமாகவே அப்படி சிலர் இருப்பதை போன்று ரசிகர்கள் டிசைன் செய்துள்ளனர். இதனை புதிதாக பார்க்கும் வீரர்கள் ' என்னடா கோலி இப்படி குண்டாகிட்டாரே' என நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.

வைரல் புகைப்படங்கள்

வைரல் புகைப்படங்கள்

வீரர்களின் இந்த வயதான லுக்குகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவற்றினை இந்திய அணி வீரர்களின் கண்ணில் படும் வரை ஷேர் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரி வருகின்றனர். ஆனால் விராட் கோலி இதனை பார்த்தால் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வாரா என்பது சந்தேகம் தான். ஏனென்றால், இந்திய அணிக்குள் நுழையும் வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் என அவர் முன்பு தெரிவித்த கருத்துதான் காரணம்.

கோலியின் பேச்சு

கோலியின் பேச்சு

இந்திய அணிக்குள் நுழைய விரும்பும் ஒவ்வொரு வீரரும் மனதில் ஒன்றை மட்டும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது தேசத்திற்காக விளையாட விரும்பினால், உயர்ந்த அளவிலான ஃபிட்னஸ் மற்றும் திறமை இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். அதனால் தான் உலகளவில் இந்திய அணி டாப்பாக உள்ளது. அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை எனத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 21, 2021, 13:22 [IST]
Other articles published on Aug 21, 2021
English summary
Fans makes Virat Kohli & Team Players in trending pics become ‘FIT to FAT’
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+