“ரோகித் -க்கு மட்டும் அந்த பிரச்சினை இருக்காதோ?” சுதாரித்த விராட் கோலி ரசிகர்கள்..சிக்கலில் பிசிசிஐ
மும்பை: விராட் கோலியிடம் இருந்த அதே பிரச்சினை ரோகித் சர்மாவிடமும் இருக்கும் என பிசிசிஐ-க்கு எதிராக கோலி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதனுடன் சேர்த்து புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்பதையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டெஸ்ட் கேப்டன்
அதன்படி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே ரோகித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ரோகித்தின் கேப்டன்சி அனுபவம், சீனியாரிட்டி ஆகியவையை மனதில் வைத்து கே.எல்.ராகுல், பண்ட் போன்றோருக்கு வாய்ப்பு தராமல் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

வலுக்கும் எதிர்ப்பு
இந்நிலையில் விராட் கோலியின் ரசிகர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். விராட் கோலியின் விவகாரத்தில் பிசிசிஐ கொடுத்த விளக்கம் 3 வடிவ கேப்டன்சியில் இருக்கும் சிக்கல்கள் தான். அதாவது, ஒரே நபர் 3 அணிகளுக்கும் கேப்டனாக இருப்பது பெரும் அழுத்தத்தை கொடுக்கும் என்றும், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு தனி கேப்டனும், டெஸ்ட்டிற்கு தனி கேப்டனும் இருந்தால் தான் சரியாக இருக்கும் என கோலியை நீக்கியது.

தோனிக்கே பிரச்சினை
இதே பிரச்சினையை முன்னாள் கேப்டன் தோனியே உணர்ந்துள்ளார். அவர் 3 அணிகளையும் சமாளிக்க முடியவில்லை என்பதால் தான் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இப்படிபட்ட சூழலில் தான் பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இது மிகப்பெரும் ரிஸ்க் ஆகும்.

ரசிகர்கள் கொந்தளிப்பு
3 வடிவ கிரிக்கெட்டிற்கு தற்போது மட்டும் ஒரே கேப்டன் இருந்தால் அழுத்தம் இருக்காதா? அதுவும் தசைப்பிடிப்பு பிரச்சினை இருக்கும் ஒரு வீரருக்கு எப்படி கேப்டன்சியை தரலாம். இதில் இருந்து விராட் கோலியின் விவகாரத்தில் பிசிசிஐ வேண்டுமென்றே சதி வேலை செய்துள்ளது என ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications