Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹேய் வீடியோ எடுக்காத.. சாலையில் சாஹல் - நெஹ்ரா செய்த விஷயம்.. மதுபோதை என விமர்சனங்கள் - வீடியோ!

மும்பை: யுவேந்திர சாஹல் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் சாலையில் செய்த விஷயத்தால் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து வெற்றி கொண்டாட்டங்கள் நடந்துள்ளது.

இதில் குஜராத் அணி வீரர்கள் மட்டுமின்றி, மற்ற அணியில் இருந்த வீரர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

 வெற்றி பார்ட்டி

வெற்றி பார்ட்டி

அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குஜராத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. இவர் இதற்கு முன்னர் ஆர்சிபியில் பணியாற்றி வந்தார். ஆர்சிபியில் இருந்த போது இவரும் யுவேந்திர சாஹலும் ஒன்றாக பணியாற்றியுள்ளனர்.

அழைத்த நெஹ்ரா

அழைத்த நெஹ்ரா

இதனால் பார்ட்டியை முடித்துவிட்டு, தனது மனைவி தனஸ்ரீயுடன் காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சஹால் நல்ல போதையில் இருந்தது போன்று தெரிகிறது. அங்கு வந்த ஆஷிஷ் நெஹ்ரா, "காரில் ஏறாதே.. வா பஸ்ஸில் போகலாம்" என சஹாலை அழைத்துள்ளார். ஆனால் சாஹல் வர மறுத்துள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

சாஹலின் மனைவி தனஸ்ரீ காரில் அமர்ந்துவிட்டார். மனைவியை தனியாக அனுப்பிவிட்டு, நான் எப்படி பஸ்ஸில் வருவது எனக்கேட்க, ஆஷிஷ் நெஹ்ரா உடனடியாக காருக்கு சென்று தனஸ்ரீயை கட்டாயப்படுத்தி பஸ்ஸில் செல்ல இழுத்துச் சென்றார். அவர்கள் போதையில் இருந்தது தெளிவாக தெரிந்தது. எனவே பாதுகாவலர்கள் அதனை வீடியொ எடுக்க கூடாது என தடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆச்சரியத்தில் ரசிகர்கள்

யுவேந்திர சாஹல் எப்போதும் நடனமாடிக்கொண்டும், குறும்புத்தனம் செய்துக்கொண்டும் இருந்ததை தான் ரசிகர்கள் பார்த்திருந்தனர். ஆனால் அவர் சாலையில் மதுபோதையில் சுற்றி வந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Tuesday, June 7, 2022, 19:39 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+