Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்ஸ் நிர்வாகத்தை போட்டு கொடுத்த கேப்டன் மார்க்கரம்.. உம்ரான் பற்றி எதும் தெரியாது என கருத்து

பெக்ளூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் கேப்டன்களின் செயல்பாடுகளை தலையிடுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களுக்கு அவர்கள் போதிய மரியாதை தருவதில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.

ஹைதராபாத் அணிக்காக இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த வார்னர், ரஷீத் கான் ஆகியோர் எல்லாம் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.

Fans shocked after SRH captain Aiden Markam said he doesnt know about umran malik

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்த தொடரில் வெறும் ஏழு போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உம்ரான் மாலிக்கிற்கு காயம் ஏதும் ஏற்பட்டதா என்று அந்த அணியின் கேப்டனுக்கு தெரியவில்லை என்பதுதான் பெரிய காமெடியே.

இது குறித்து பேசிய கேப்டன் ஏய்டன் மார்க்கரம், உம்ரான் மாலிக் ஒரு திறமையான வீரர். ஆனால் தற்போது அவர் ஏன் விளையாடவில்லை என்று எனக்கே தெரியாது. திரை மறைவில் என்ன நடக்கிறது என்று சத்தியமாக என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி நிர்வாகம் வீரர்கள் தேர்வில் மீண்டும் தலையிடுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Fans shocked after SRH captain Aiden Markam said he doesnt know about umran malik

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷா போக்லே, ஒரு அணியில் என்ன நடக்கிறது என்று கேப்டனுக்கு தெரியவில்லை என்று சொன்னால் அது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 25 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய கிளன் பிலிப்ஸ், அடுத்த ஆட்டத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட காமெடியும் நடந்தது. இது போன்ற தவறான நடவடிக்கையால் தான் ஹைதராபாத் அணி தோற்பதாக ரசிகர்கள் பலரும் குற்றச்சாட்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, May 18, 2023, 22:44 [IST]
Other articles published on May 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+