Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓட்ட வாயை வைத்து கொண்டு சிக்கிய ராகுல்.. அணிக்கு வெற்றியை தேடி தந்தும் பொளக்கும் ரசிகர்கள்

சென்னை : உலக கோப்பை போன்ற ஒரு தொடரில் ஆஸ்திரேலியா போன்ற அணியை ஒரு வீரன் வீழ்த்தினால் என்றால் அவரை ஹீரோ போல் ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவார்கள்.

ஆனால் இங்கு இந்திய அணி வீரர் கே எல் ராகுலை ரசிகர்களும் சில விமர்சனங்களும் போட்டு பொளந்து வருகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணமும் சரி என்று தான் தோன்றுகிறது.

KL Rahil

200 ரன்கள் என்று இலக்கை எட்ட சென்ற இந்திய அணி இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இப்படி ஒரு கட்டத்தில் இந்திய அணி நிச்சயம் தோற்றுவிடும் தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக கே.எல் ராகுல் 97 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் இந்திய அணியை சிக்சர் அடிக்க வைத்து வெற்றியைத் தேடித் தந்த ராகுல் சோகமாக களத்தில் அமர்ந்திருந்தார். இதற்கு காரணம் தமது சதம் பறிபோகிவிட்டது என்று ஏமாற்றம் அடைந்ததாக ராகுல் உண்மையை கூறிவிட்டார்.

இதற்கு தான் தற்போது ரசிகர்கள் கே என்று ராகுலை பிளந்து வருகின்றனர் அணியின் வெற்றிக்காக கே எல் ராகு விளையாட வேண்டுமே தவிர சதம் அரை சதம் அடிப்பதற்காக விளையாட கூடாது என பலரும் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள் இந்திய அணி 41.2 ஓவரில் வெற்றி பெற்றும் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு சென்று இருக்கிறது.

இந்திய அணியை விட இரண்டு பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற அணிகள் எல்லாம் முன்னிலையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட சதம், அரை சதம் போன்ற சாதனைகளை பெரிதாக நினைக்க கூடாது என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.

மேலும் அணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துவிட்டு சிறுபிள்ளை போல் சதம் அடிக்க முடியவில்லை என்று சோகமாக அமர்வதெல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கு அழகல்ல என்றும் பலரும் விமர்சித்து வருகின்றார்கள். தனிப்பட்ட சாதனைகளுக்காக இந்திய வீரர்கள் விளையாடாமல் அணிக்காக விளையாட தொடங்குங்கள் என்றும் அறிகுறி கூறி வருகிறார்கள்.

Story first published: Monday, October 9, 2023, 0:57 [IST]
Other articles published on Oct 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+