For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs SRH - சீக்கிரம் அடிச்சி ஜெய்பேன்னு நினைச்சியா? சிஎஸ்கேவை கலாய்க்கும் மீம்ஸ்..தல டக்கர் டோய்!

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகள் பெற்றுள்ளது. எனினும் ஹைதராபாத் அணி 135 ரன்கள் என்ற இலக்கை தான் நிர்ணயித்தது.

இதனை எதிர்கொண்ட சிஎஸ்கே இந்த இலக்கை விரைவாக எட்டி ரன் ரேட்டில் முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணியும் 8 பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வெற்றி இலக்கை எட்டினர்.

Fans trolls csk for slow chasing and moeen ali poor fielding

இதனால் ரன் ரேட்டில் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இதனை கலாய்க்கும் வகையில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். சார்பட்டா பரம்பரையில் ரங்க வாத்தியார் பேசும் வசனத்தை நீ 135 ரன்கள் டார்கெட் வச்சிருக்கலாம். ஆனால் அதுக்காக நாங்க ரொம்ப ஈஸியா அடிச்சு சேஸ் பண்ணிடுவோம் என்று நினைக்காத என்று கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

டேவிட் வார்னருக்கு பிறகு புஷ்பா பட ஸ்டைலை ஜடேஜா தான் அடிக்கடி செய்வார். கடந்த சில நாட்களாக பார்மில் இல்லாத ஜடேஜா நடப்பு ஐபிஎல் சீசனில் நன்றாக பந்து வீசி வருகிறார். இதுவரை 9 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்திருக்கிறார். இதில் மூன்று ஆட்டங்களில் ரன்களை குறைவாகும் ஜடேஜா கொடுத்திருக்கிறார். இதனால் ஜடேஜாவை புஷ்பா அல்லு அர்ஜுனுடன் ஒப்பிட்டு மீம் கிரியேட்டர்ஸ்கள் பதிவிட்டு இருக்கிறார்கள்.

Fans trolls csk for slow chasing and moeen ali poor fielding

இதேபோன்று மோயின் அலி தொடர்ந்து பில்டிங்கில் சொதப்பி வருகிறார் என்று ஹாரி புரூக் ரன் அவுட் செய்யும் வாய்ப்பை அவர் வீணடித்தார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் மோயின் அலி இவ்வாறு செய்திருக்கிறார். இதனால் கடுப்பான ரசிகர்கள் டேய், தங்கதுரை உனக்கு அவ்வளவுதான் ஓவரா பண்ண கூடாது என்ற வசனத்தை மோயின் அலிக்காக போட்டிருக்கிறார்கள்.

இதேபோன்று மகேந்திர சிங் டோனி இன்று ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் ஆகியவற்றை செய்திருக்கிறார். இது ஐபிஎல் தொடரில் தோனி விக்கெட் கீப்பராக 200 வது முறை வீரர்களை ஆட்டம் இழக்க செய்திருக்கிறார். இதனை பாராட்டும் விதமாக தல டக்கர் டோய் என்ற மங்காத்தா டெம்ப்ளேட்டை வைத்து நெட்டிசன்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

இதேபோன்று தோனி மைக்கேல் ஹஸி ஆரம்பகாலத்தில் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள். தற்போது கான்வேவும் ருத்ராஜ் கெய்க்வாடும் அதே போல் சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்கிறார்கள். அதனை முத்து படத்தில் அப்பா ரஜினி மகன் ரஜினி ஒப்பிட்டு பார்ப்பது போல் மீம் கிரியேட்டஸ்கள் லொள்ளு செய்து இருக்கிறார்கள்.

Story first published: Friday, April 21, 2023, 23:43 [IST]
Other articles published on Apr 21, 2023
English summary
Fans trolls csk for slow chasing and moeen ali poor fielding CSK vs SRH - சீக்கிரம் அடிச்சி ஜெய்பேன்னு நினைச்சியா? சிஎஸ்கேவை கலாய்க்கும் மீம்ஸ்..தல டக்கர் டோய்!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+