மும்பை அணிக்கு வந்தது மகிழ்ச்சி..!! சச்சின் மகன் வெளியிட்ட வீடியோ..!! வச்சு செய்த நெட்டிசன்கள்..!!
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை தேர்வு செய்தது. இது ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வைரலானது.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கினால், அவரது தம்பி பிரேம்ஜியை நடிக்க வைப்பதும், கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கினால் அவரது தந்தையை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதும் இயல்பு தானே.
அதே போல் தான் மும்பை இந்தியன்ஸ் அணியும், சச்சின் டெண்டுல்கர் மகனை தேர்வு செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மும்பை அணிக்கு தாம் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் மும்பை அணி என் மீது நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது. இதனால் இந்த தொடரில் தனது திறமையை நிரூபிபேன் என்று அர்ஜூன் டெண்டுல்கர் கூறினார்.

இதற்கு நெட்டிசன்கள், மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். துப்பாக்கி முனையில் நின்று பேசுவது போல் அர்ஜூன் பயந்து பேசுவதாக கிண்டலடித்துள்ளனர். மேலும் சச்சின் மகன் என்பதால் தான் மும்பை அணி அவரை எடுப்பதாகவும், அர்ஜூன் டெண்டுல்கர் மீது நம்பிக்கை எல்லாம் மும்பை அணிக்கு இல்லை என்றும் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பல திறமையான வீரர்கள் இருந்தும், அவர்களுக்கு அணியில் இடம் இல்லாமல் இருக்கும் நிலை தான் உள்ளது. ஆனால் பிரபலத்தின் மகன் என்பதால் அர்ஜூனுக்கு மட்டும் இடம் தருவதாக ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். நேற்று ஏலத்தின் போது ஆக்சனரே அர்ஜூன் பெயர் வந்ததும் மும்பையை பார்த்து கிண்டல் செய்த நிகழ்வும் நடைபெற்றது.


Click it and Unblock the Notifications