Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஒரேயொரு பேட்ஸ்மேன் தான்.. மொத்த ஆஃப்கானிஸ்தான் டீமும் குளோஸ்” தெறிக்கும் மேக்ஸ்வெல் மீம்ஸ்!

மும்பை: ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social Media about Australias Glenn Maxwell oneman show against Afghanistan in the World Cup 2023

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனியொரு வீரராக கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதனை சரத் குமாரை ஜெயிலில் சந்திக்கும் வடிவேலு, "ஒரேயொரு குண்டு தான் போட்டேன்.. மொத்த கூட்டமும் குளோஸ்" என்று சொல்லி தன்னை பற்றி பெருமையாக பேசுவார். அதனை மாற்றி, ஒரேயொரு பேட்ஸ்மேன் தான்.. மொத்த ஆஃப்கானிஸ்தான் டீமும் குளோஸ் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அதிரடி ரகம்.

Fantastic memes from Social Media about Australias Glenn Maxwell oneman show against Afghanistan in the World Cup 2023

1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் அதிரடி ஆட்டம் விளையாட, எதிர்முனையில் கிர்மானி சிறப்பாக கம்பெனி கொடுத்தார். நேற்றும் அதேபோல், 202 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் மேக்ஸ்வெல் 179 ரன்களும், கம்மின்ஸ் 12 ரன்களும் சேர்த்தனர். இதனை கிர்மானி, நீ அடி.. நான் இருக்கேன் என்று 83 படத்தில் ரன்வீர் சிங்கிடம் சொல்வது போல் கம்மின்ஸ், மேக்ஸ்வெல்லிடம் கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Fantastic memes from Social Media about Australias Glenn Maxwell oneman show against Afghanistan in the World Cup 2023

உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறிய நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்குள் கால் பதித்தது. இந்த தொடரின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக 6 வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனை எஸ்எம்எஸ் படத்தில் சந்தானத்தை கழற்றிவிட்டு வரும் ஜீவாவை கண்டுபிடித்து, "மட்டன் குஸ்காவா" என்று கூறுவார். அதேபோல் சோக்கர்ஸான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை பார்த்து, ஆஸ்திரேலிய அணி கேட்பது போல் உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Fantastic memes from Social Media about Australias Glenn Maxwell oneman show against Afghanistan in the World Cup 2023

நேற்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் வாழ்வின் சிறந்த இன்னிங்ஸை ஆடிய போது, மறுமுனையில் நின்றிருந்த கம்மின்ஸ் 68 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனை வின்னர் படத்தில் நாயகியின் வீட்டிற்குள் பிரசாந்த் செல்லும் போது வடிவேலு கயிற்றை கட்டிக் கொண்டு சேட்டையை கொடுப்பார். அதனை பார்த்து பிரசாந்த், என்னடா பண்ற.. என்று கேட்க, அதற்கு வடிவேலு, என்னமோ பண்றேன்.. போடா என்று பதில் சொல்லுவார். அதேபோல் நேற்றைய ஆட்டத்திலும், மேக்ஸ்வெல்லை பார்த்து கம்மின்ஸ், "என்னமோ பண்றேன்.. நீ பாட்டுக்கு பேட்டை சுத்துடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Story first published: Wednesday, November 8, 2023, 11:10 [IST]
Other articles published on Nov 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+