Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs AFG: யாருடா அது அட்டாக்கிங் சாம்பியன்ஸ்.. என்னென்ன பேச்சு பேசுனாங்க.. தெறிக்கும் மீம்ஸ்

டெல்லி: இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social Media after Afghanistan defeats England by 69 Runs at Delhi in World Cup 2023

உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. டெல்லி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்த நிலையில், ஸ்பின்னர்கள் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை போக்கிரி படத்தில் விஜய், "எத்தனை ரஜினி படம் பார்த்திருப்போம்" என்று ஒரு வசனம் சொல்லுவார். அதனை மாற்றி ரஷீத் கான், "எத்தனை ஐபிஎல் மேட்ச் இந்தியாவுல ஆடிருப்போம்" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

Fantastic memes from Social Media after Afghanistan defeats England by 69 Runs at Delhi in World Cup 2023

டெல்லி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்ததோடு, மைதானத்தில் பனிப்பொழிவும் இல்லாமல் இருந்தது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ள நிலையில், அடுத்ததாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதனை கலகலப்பு படத்தில் பீதியில் இருக்கும் மனோபாலா புகைப்படத்தை பாபர் அசாம் பயத்தில் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic memes from Social Media after Afghanistan defeats England by 69 Runs at Delhi in World Cup 2023

2019 உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி சுமார் 400 ரன்களை குவிக்கும். கேப்டன் மார்கன் விரட்டி விரட்டி சிக்ஸ் அடிப்பார். இதற்கு ஆஃப்கானிஸ்தான் அணி மிரட்டலான பதிலடியை கொடுத்துள்ளது. இதனை மாமன்னன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வடிவேலுவிடம் ஃபகத் ஃபாசில் சொல்வதை இங்கிலாந்து அணி சொல்வதாக மாற்றி, "வாழ்த்துகள்னா.. வெற்றிபெற்றுட்டீங்க போல.. இந்த நடப்பு சாம்பியன மறந்துறாதீங்க.." என்று சொல்வது போலவும், அதற்கு ஆஃப்கானிஸ்தான் அணி, "உங்களை எப்படி மறக்க முடியும்" என்று பதில் அளிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கெத்து மொமண்ட்.

Fantastic memes from Social Media after Afghanistan defeats England by 69 Runs at Delhi in World Cup 2023

இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரில் புள்ளி கணக்கை தொடங்கியுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. இதன் காரணமாக கடைசி இடத்தில் இருந்த ஆஃப்கான், 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை 6ல் இருந்து 60 வரை படத்தில் அண்ணனிடம் இருந்து பிரிந்து செல்லும் தம்பி காட்சியில் அண்ணனாக ஆஸ்திரேலியாவையும், தம்பியாக ஆஃப்கானிஸ்தானையும் மாற்றி, "அண்ணே, இங்கிலாந்து கூட ஜெய்ச்சிட்டோம். 6வது இடம் போறோம்.. போய்ட்டு வா" என்று ஆஸ்திரேலியா சோகத்துடன் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Story first published: Monday, October 16, 2023, 8:51 [IST]
Other articles published on Oct 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+