Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ரொம்ப அடிக்கிறான்டா அவன்” பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய டெல்லி.. வெளுக்கும் ரசிகர்களின் மீம்ஸ் இதோ!

தரன்சாலா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic Memes from Social Media after Delhi won by 15 Runs against Punjab in IPL 2023

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே சொதப்பி வந்த இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு நேற்று மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 38 பந்துகளில் 54 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை பேட்ட படத்தில் வரும், "கீழ விழுந்துட்டான் என்று நினைச்சியா.. ஜெயிக்க பொறந்தவன்.. பேட்ட பராக்" என்று ஒரு வரிகள் வரும். அதனை பிரித்வி ஷாவுக்கு ஒப்பிட்டு ரசிகர்கள் உருவாக்கிய மீம் மரண மாஸ் ரகம் தான்.

Fantastic Memes from Social Media after Delhi won by 15 Runs against Punjab in IPL 2023

டெல்லி அணியின் ரூஸோவ் ருத்ரதாண்டவம் ஆடிய நிலையில், கடைசி ஓவரை ஹர்ப்ரீத் ப்ராருக்கு கேப்டன் ஷிகர் தவான் வழங்கினார். அந்த ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்டது. அதனை, சிங்கமுத்துவை டெல்லி அணியாகவும், வடிவேலுவை ஷிகர் தவானாகவும் மாற்றி, லாஸ்ட் ஓவர் ஸ்பின்னர்-க்கு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி தம்பி என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஃபன்.

Fantastic Memes from Social Media after Delhi won by 15 Runs against Punjab in IPL 2023

டெல்லி அணியின் ஃபீல்டிங்கின் போது அதர்வா தய்டேவுக்கு ஒரு கேட்ச், ரன் அவுட் வாய்ப்பும், லிவிங்ஸ்டனுக்கு ஒரு கேட்ச் மற்றும் ரன் அவுட் வாய்ப்பையும் டெல்லி வீரர்கள் கோட்டைவிட்டனர். இதனை மாற்றி, வடிவேலுவை இடுப்பில் கத்தியால் குத்தும் அல்வா சீனுவை பார்த்து சிங்கமுத்து சொல்லும், "மண்ட கோளாறு உள்ளவன்.. லூசு பய" என்ற வசனத்தை, அப்படியே டெல்லி வீரர்களுக்கு மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Fantastic Memes from Social Media after Delhi won by 15 Runs against Punjab in IPL 2023

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 48 பந்துகளில் 94 ரன்கள் விளாசினார். அதில் 9 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதனை படிக்காதவன் படத்தில் விவேக், "ரொம்ப அடிக்கிறான்டா அவன்" என்று ஒரு வசனம் பேசுவார். அதனை அப்படியே டெல்லி அணி பேசுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social Media after Delhi won by 15 Runs against Punjab in IPL 2023

நேற்றையப் போட்டியில் டெல்லி அணியின் சால்ட் 14 பந்துகளில் 26 ரன்களும், பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும், ரூஸோவ் 37 பந்துகளில் 82 ரன்களும், வார்னர் 46 ரன்களும் விளாசினர். இதனை கலகலப்பு படத்தில் சந்தானத்தை சந்திக்க விமல் வரும் போது, ஒவ்வொரு அடியாளையும் பார்த்தி பீதியாகும் விமல் நண்பர்களாக சிஎஸ்கே பந்துவீச்சாளர்களையும், சந்தானத்தின் அடியாட்களாக டெல்லி பேட்ஸ்மேன்களையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் சென்னை ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ். ஏனென்றால் சென்னை அணி கடைசி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது

Story first published: Thursday, May 18, 2023, 7:27 [IST]
Other articles published on May 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+