Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ஆல் ஏரியாலயும் ஐயா (கில்)லிடா” சுப்மன் கில்லால் அதிர்ந்த அகமதாபாத் மைதானம்.. வெறித்தன மீம்ஸ் இதோ!

அகமதாபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 58 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை கில் பதிவு செய்தார். அருந்ததி படத்தில் பழைய நினைவுகளை மனோரமா பகிரும் போது, "அவன் ஆடிய ஆட்டத்துல கந்தர்வகோட்டை சமஸ்தானமே அதிர்ந்துபோச்சு" என்று டயலாக் சொல்லுவார். அதனை மாற்றி, "அவன் ஆடிய கிளாஸ் இன்னிங்ஸை பார்த்து, அந்த அகமதாபாத் மைதானமே அதிர்ந்து போச்சு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic memes from Social Media after, Gujarat won by 34 Runs against SRH in IPL 2023

நேற்றையப் போட்டியில் விஜய் சங்கர் காயமடைந்ததன் காரணமாக சாய் சுதர்சன் களமிறங்கினார். இந்த வாய்ப்பில், 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்து சிறந்த இன்னிங்ஸை ஆடினார். அதனை சைரா படத்தில் விஜய் சேதுபதி, வீரன் விளைந்த தமிழ் மண்ணில் இருந்து வரேன்" என்று ஒரு வசனம் சொல்லுவார். சாய் சுதர்சன் இன்னிங்ஸை அதனோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Fantastic memes from Social Media after, Gujarat won by 34 Runs against SRH in IPL 2023

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, 27 ரன்களும் சேர்த்து அசத்தினார். இதனைஅயன் படத்தில் பிரபுவை பார்த்து வில்லன் சொல்லும், "உன் இரத்தத்துல இன்னும் சூடு குறையல தாஸ்" என்று சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி, "உன் இரத்தத்துல இன்னும் சூடு குறையல புவி" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மெர்சல்.

Fantastic memes from Social Media after, Gujarat won by 34 Runs against SRH in IPL 2023

நேற்றையப் போட்டியில் ஐதராபாத் அணியின் கிளாஸன் தனியாளாக போராடி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இந்திய ஆடுகளத்தில் ஸ்பின்னர்களை அவ்வளவு எளிதாக சிறப்பாக எதிர்கொண்டார். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கிளாஸனை, "எங்க டீம் மிடில் ஆர்டர்-க்கு விளையாட கிளாஸன் கேட்டு வந்துருக்கோம்" என்று ஆர்சிபி அணி, ஐதராபாத் அணியை பார்த்து கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் அல்டிமேட் காமெடி.

Fantastic memes from Social Media after, Gujarat won by 34 Runs against SRH in IPL 2023

2023ஆம் ஆண்டு இளம் வீரர் சுப்மன் கில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், டி20 போட்டிகளில் சதம், டெஸ்ட் கிரிக்க்கெட்டில் சதம் மற்றும் ஐபிஎல் தொடரிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். அதனை கில்லி படத்தில் விஜய் சொல்லும், "ஆல் ஏரியாலயும் ஐயா கில்லிடா" என்று வசனத்தை மாற்றி, ஆல் ஏரியா.. ஐ அம் (கில்)லி என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

Fantastic memes from Social Media after, Gujarat won by 34 Runs against SRH in IPL 2023
Story first published: Tuesday, May 16, 2023, 7:45 [IST]
Other articles published on May 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+