Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்த ஆஸ்திரேலியாவ நம்பாதீங்க சார்.. எல்லாரும் ஃபார்முக்கு வந்துட்டாங்க.. வெறித்தன மீம்ஸ்

இந்தூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social Media after India defeats Australia by 99 Runs in the 2nd ODI at Indore

நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டிஎல்எஸ் முறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளிலும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன் இப்படி தான் தோல்வியை சந்தித்தது. இதனை வைத்து, சார் நடிக்கிறார் சார்.. ஆஸ்திரேலியா எப்பவுமே உலகக்கோப்பைக்கு முன்பான தொடர்லாம் மோசமா தோத்துட்டு சரியா உலகக்கோப்பைல வந்து மஜாவா ஆடுவான் சார் என்று அஜித்தின் வில்லன் கதாபாத்திரத்தை பார்த்து கருணால் புலம்புவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மஜா ரகம்.

Fantastic memes from Social Media after India defeats Australia by 99 Runs in the 2nd ODI at Indore

அண்மை காலமாக சுழற்பந்துவீச்சாளர்களிடம் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை கொடுத்தனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடம் ஸாம்பாவை வெளுத்து கட்டினார். இதனை ஜெயிலர் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் அங்க மூன்றாவது ஒருத்தன் இருப்பானே என்று ரஜினி சொன்ன பின் சிவராஜ் குமார் எண்ட்ரி கொடுப்பார். அதுபோல் ஸ்பின்னர்களை விளாசுவது இஷான் கிஷனா, அவன் விக்கெட்டையும் வீழ்த்திருங்கடா என்று ஆஸ்திரேலியா சொல்வது போலவும், ஆனால் மாறாக ஸ்ரேயாஸ் ஐயர் வருவதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic memes from Social Media after India defeats Australia by 99 Runs in the 2nd ODI at Indore

நேற்றைய ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர்களை விளாசினார். மொத்தமாக 37 பந்துகளில் 6 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் விளாசி 72 ரன்கள் குவித்தார். இதனை சர்தார் படத்தில் கார்த்தில், பற்ற வைத்து பறக்க விடப் போறோம் என்று கூறுவார். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் அப்படி இருந்ததாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Fantastic memes from Social Media after India defeats Australia by 99 Runs in the 2nd ODI at Indore

இந்திய அணியின் அஸ்வினை சமாளிக்க ஆஸி. வீரர் டேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேன், ஸ்விட்ச் ஹிட் என்று வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அஸ்வின் வழக்கம் போல் கேரம் பாலை வீசி வார்னரை முடித்து கட்டினார். அதனை ரஜினி முன் பல்வேறு வித்தைகளை செய்யும் அடியாள் ஒருவரை தலையில் ஒரே அடியாக அடித்து வீழ்த்துவதை போல் அஸ்வினை வார்னரை வீழ்த்தியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic memes from Social Media after India defeats Australia by 99 Runs in the 2nd ODI at Indore

நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு காலத்தில் சிஎஸ்கேவில் இணைந்து ஆடிய இருவரும் தற்போது வேறு வேறு அணிகளுக்காக ஆடி வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக ஆடுவதை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், வேல் படத்தில் இரு சூர்யாவையும் ஒன்றாக பார்க்கும் லட்சுமியை போல் பார்ப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

Story first published: Monday, September 25, 2023, 10:45 [IST]
Other articles published on Sep 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+