For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக்கோப்பை வந்துருச்சு.. ஆஸ்திரேலியாவோட ஒரிஜினல் முகமே வேற.. ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!

ராஜ்கோட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்பின் அடுத்து சதம் விளாச ரோகித் சர்மா அதிரடியாக ஆடிய போது, மேக்ஸ்வெல் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த கேட்சை மேக்ஸ்வெல் அவருக்கே தெரியாமல் பிடித்தார். இதனால் கேட்ச் பிடித்துவிட்டேனா என்ற அதிர்ச்சியுடன் மேக்ஸ்வெல் இருந்தார். இதனை வைத்து "ஹே.. எப்புட்றா..கைல வந்துச்சு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social Media after India lost by 66 Runs against Australia in the 3rd ODI at Rajkot

அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டார். பந்துவீச்சில் 48 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில், பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்கி 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பை பறிகொடுத்தாக ரசிகர்கள் சோகமடைந்தனர். இதனை வடசென்னை படத்தில் வரும் "லைஃப தொலைச்சிட்டியே டா" வசனத்தை மாற்றி, "கிடைச்ச சான்ஸ வேஸ்ட் பண்ணிட்டியே வாஷி" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்டல் டச்.

Fantastic Memes from Social Media after India lost by 66 Runs against Australia in the 3rd ODI at Rajkot

நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்தது. இதன்பின் உலகக்கோப்பை தொடரின் அக்.8ல் நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இதனால் இந்த தொடரை கைப்பற்றியது போல் உலகக்கோப்பையையும் ஜெய்த்துவிடூவீர்கள் தானே என்று ரசிகர்கள் கேட்பது போலவும், அதற்கு இந்திய அணியோ, "இல்ல.. இன்னும் ஒரு 4 முதல் 5 சோதனை செய்ய வேண்டியது இருக்கு.. எப்போ அதனை செய்யலாம்னு யோசிக்கிறோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல் ரகம்.

Fantastic Memes from Social Media after India lost by 66 Runs against Australia in the 3rd ODI at Rajkot

முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மோசமாக விளையாடி தோல்வியடைந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றது. இதனை விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசில், "அவரு மத்தவங்க கிட்ட காட்டின முகம் வேற.. அவரோட நிஜ முகம் வேற" என்று வசனத்தை ஆஸ்திரேலியாவுக்கு பொருத்தி உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

Fantastic Memes from Social Media after India lost by 66 Runs against Australia in the 3rd ODI at Rajkot
Story first published: Thursday, September 28, 2023, 10:52 [IST]
Other articles published on Sep 28, 2023
English summary
IND vs AUS: Australia won by 66 runs against India in the 3rd ODI at Rajkot. Lets see some of the best memes from Social Media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+