Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”உனக்கு இந்த பிரச்சனை வேற இருக்கா” ஆசியாவுக்கு வெளியில் சொதப்பும் சுப்மன் கில்.. தெறிக்கும் மீம்ஸ்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்களை குவித்துள்ளது. இதனையொட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய அசத்தல் மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic Memes from Social media after India scores 288 Runs for 4 wickets in the Day 1 against West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களை விளாசினார். லீக் போட்டிகளை போல் சாதாரண போட்டிகளில் வெளுக்கும் ரோகித் சர்மா, இறுதிப்போட்டிகளில் சொதப்பி வருகிறார். இதனை கிண்டல் செய்யும் வகையில், சச்சின் படத்தில் வடிவேலு, "தூரமா இருக்கும் போது நல்லா தெரியுற.. பக்கத்துல வரவர காணாம போய்ற" என்று கூறுவார். அதுபோல் லீக் போட்டிகளில் விளாசும் ரோகித், இறுதிப்போட்டிகளில் சொதப்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Fantastic Memes from Social media after India scores 288 Runs for 4 wickets in the Day 1 against West Indies

நேற்றைய நாள் ஆட்டத்தில் இளம் வீரர் சுப்மன் கில் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் ஆசியாவுக்கு வெளியில் கில் ஆடிய கடைசி 8 ஆட்டங்களில் சொதப்பி உள்ளார். இதனால் சுப்மன் கில் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே சிறப்பாக ஆடுவார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனை கிண்டல் செய்யும் வகையில் காஞ்சனா படத்தில் கோவை சரளா, "சாமிக்கு பேய்னா டர் போல" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "சாமிக்கு அவுட்சைட் ஏசியானா டர் போல" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Fantastic Memes from Social media after India scores 288 Runs for 4 wickets in the Day 1 against West Indies

இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் விராட் கோலி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனை பாராட்டும் வகையில் இதற்கு முன் 500 போட்டிகளில் அடிய இந்திய வீரர்களான சச்சின், டிராவிட் மற்றும் தோனி ஆகிய மூவரும் இணைந்து விருது கொடுப்பது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

Fantastic Memes from Social media after India scores 288 Runs for 4 wickets in the Day 1 against West Indies

நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு ஷார்ட் பால் திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால் அதனை ரோகித் சர்மா எளிதாக சிக்சர் அடித்து அசத்தினார். இவர் தான் இப்படி அடிக்கிறாரென்றால், ஜெய்ஸ்வாலும் சிக்சர் விளாசி மிரட்டினார். இதனை மெர்சல் படத்தில் முதல்முறையாக மகன் விஜய் பார்க்கும் எஸ்ஜே சூர்யாவுக்கு தந்தை விஜய் நினைவில் வருவது போல் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Story first published: Friday, July 21, 2023, 9:26 [IST]
Other articles published on Jul 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+