Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”வா தலைவா.. வா தலைவா.. எவ்ளோ நாள் ஆச்சு” பும்ராவின் மரண மாஸ் கம்பேக்.. ரசிகர்களின் அசத்தல் மீம்ஸ்!

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் டிஎஸ்எஸ் விதியால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இதனை கோமாளி படத்தில் ஜெயம் ரவியை அழைக்கும் யோகி பாபு, "வா மச்சா.. வா மச்சா.. உன்னை இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு" என்பார். அதுபோல் பும்ராவின் கம்பேக்கை, வா தலைவா.. வா தலைவா.. உன்னை இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு என்று ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

Fantastic memes from Social media after india won by 2 runs against ireland and Bumrah Come back

நேற்றைய ஆட்டத்தில் மழை காரணமாக இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதியின்படி வென்றதாக அறிவிக்கப்பட்டது. 6.3 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்ததால், இந்தியா வெற்றிபெற்றது. ஒரு வேளை 44 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்திய அணியின் பாடு திண்டாட்டம் தான். இதனால் அயர்லாந்து அணி வெற்றிபெறும் நிலை ஏற்பட்டிருக்கும். இதனை ஜஸ்ட் மிஸ் என்று அயர்லாந்து அணி சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Fantastic memes from Social media after india won by 2 runs against ireland and Bumrah Come back

அயர்லாந்து அணியின் பேட்டிங்கின் போது இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். ஆனால் அந்த ஓவரில் 22 ரன்களை அர்ஷ்தீப் சிங் விட்டுக் கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதனை வெற்றிவேல் சக்திவேல் படத்தில் வடிவேலுவை பார்த்து சத்யராஜ் சொல்லும், "காலையிலேயே சோத்த போட்டு கூட்டுட்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ செஞ்சிட்ட" என்று சொல்லுவார். அதனை அப்படியே ரசிகர்கள் அர்ஷ்தீப் சிங்கை பார்த்து, "நம்பி லாஸ்ட் ஓவர் கொடுத்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ செஞ்சிட்ட" என்று கிண்டல் செய்வதாக உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Fantastic memes from Social media after india won by 2 runs against ireland and Bumrah Come back

2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன்சியை ஏற்றதன் மூலம் முழுமையான பந்துவீச்சாளராக இருந்து இந்திய அணியை வழிநடத்திய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார். தற்போது, முழுநேர பந்துவீச்சாளராக இருந்து இந்திய அணியை வழிநடத்திய முதல் டி20 கேப்டன் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இதனை ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் சொல்லும் "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" என்பதை அப்படியே மாற்றி, "வேகப்பந்துவீச்சாளர் பரம்பரையில் இருந்து ஒரு இந்திய கேப்டன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Fantastic memes from Social media after india won by 2 runs against ireland and Bumrah Come back
Story first published: Saturday, August 19, 2023, 9:39 [IST]
Other articles published on Aug 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+