Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: "ஐயா.. ஷாகின் அப்ரிடி.. இப்போ செல்ஃபி எடுக்கலாமா" தெறிக்கும் இந்தியா - பாகிஸ்தான் மீம்ஸ்

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்திற்கு முன் பாகிஸ்தான் ஷாகின் அப்ரிடி, இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்த பிறகே செல்ஃபி எடுப்பேன் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார். இதன்பின் பாகிஸ்தானை மீண்டும் இந்திய அணி வீழ்த்தியது. இதனை "செக்க சிவந்த வானம்" படத்தில் அதிதி ராவ் ஹைதரி மீது வேண்டுமென்றே கழுத்தில் கையை போட்டு அரவிந்த்சாமியிடம் சிம்பு வீடியோ காலில் பேசுவார். அந்த புகைப்படத்தில் அதிதி ராவிற்கு பதிலாக ஷாகின் அப்ரிடியை போட்டு, "இப்போ செல்ஃபி எடுக்கலாமா பாய்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

Fantastic memes from social media after India won by 7 wickets against Pakistan in World Cup 2023

நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 8வது முறையாக இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. இதனை "எந்த ஊர்க்காரங்கடா நீங்க.. பரமக்குடிடா.. ஐயோ நீங்களாப்பா சாரிப்பா தெரியாம வந்துட்டேன்" என்ற சில நாட்களுக்கு முன் சிறுவர்கள் வெளியிட்ட ஒரு ரீல் ட்ரெண்டாகியது. அதிகம் கிண்டல் செய்யப்பட்ட அந்த ரீலை எடுத்து, "Whenever Pak facing India in WCs.. ஐயோ நீங்களாப்பா சாரிப்பா தெரியாம வந்துட்டேன்" என்று இந்திய அணியின் விராட் கோலி, ஜடேஜா, ரோகித் மற்றும் குல்தீப் ஆகியோரின் முகங்களை மாற்றி உருவாக்கப்பட்ட மீம் மாஸ்.

Fantastic memes from social media after India won by 7 wickets against Pakistan in World Cup 2023

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 345 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி சேஸ் செய்து, உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதனை ஆம்பள படத்தில் வரும் சந்தானம், "இவன்கிட்ட மாட்டிக்கிற அளவுக்கு மொக்கையா இருந்திருக்கியேடா" என்று தீவிரவாதியை கிண்டல் செய்வார். அதனை மாற்றி, இலங்கை அணியை பார்த்து, "இவனுகள போய் 345 ரன் சேஸிங் அடிக்கவிட்டு இருக்கிங்களேடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நக்கல் ரகம்.

Fantastic memes from social media after India won by 7 wickets against Pakistan in World Cup 2023

நேற்றைய ஆட்டத்தில் முதல் பதில் இருந்தே ரோகித் சர்மா பொளந்து கட்டிக் கொண்டு இருந்தார். சுப்மன் கில் ஆட்டமிழந்த போதும் அதிரடியை கைவிடவில்லை. அப்போது ஷாகின் அப்ரிடி பவுன்சரை வீச, மீண்டும் புல் ஷாட் மூலம் சிக்சர் அடித்தார். இதனை சூது கவ்வும் படத்தில் ரமேஷ் திலக், "துப்பாக்கி காட்டுறேன்.. சிரிக்கிற" என்று இன்ஸ்பெக்டர் பிரம்மாவுக்கு ஒரு குத்து விடுவார். அதேபோல் ரோகித் சர்மா சிக்சர் அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளையும், பும்ரா அடுத்தடுத்த ஓவர்களில் இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதுவே பாகிஸ்தான் அணியின் ஆல் அவுட்டிற்கு காரணமாக அமைந்தது. இதனை மார்க் ஆண்டனி படத்தின் இடைவேளை காட்சியில் எஸ்ஜே சூர்யா பேசும், "என்னடா மேஜிக் பன்றீங்க" என்ற வசனத்தை பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

Story first published: Sunday, October 15, 2023, 9:11 [IST]
Other articles published on Oct 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+