Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”புஷ்பானா பிளவர் இல்லடா.. ஃபயர்” சிக்சர்களால் பொளந்த இந்தியா.. ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!

சென்னை: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றதோடு, தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from social media after india won the t20 series against Ireland

நேற்றைய ஆட்டத்தில் கடைசி 2 ஓவர்களில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதனை புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜூன், "புஷ்பானா பிளவருனு நினைச்சீங்களாடா.. புஷ்பானா ஃபயரு டா" என்று சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி ரிங்கு சிங், "புஷ்பானா ஃபயருடா.. நான் வந்ததே ஆள்றதுக்கு தான் " என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் கெத்து ரகம்.

Fantastic memes from social media after india won the t20 series against Ireland

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ருதுராஜ் கெய்க்வாட் வாட்டர் பாயாக இருந்தார். இளம் வீரரான ஜெய்ஸ்வாலுக்கு குடை பிடித்ததை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், 43 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதனை வைத்து, "நேரத்தின் மிகச்சிறந்த செயலே.. அதன் மாற்றம் தான்" என்று புகைப்படங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்ட்டல் டச்.

Fantastic memes from social media after india won the t20 series against Ireland

நேற்றையப் போட்டியில் பால்பர்னி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். பும்ரா, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்டியா சாதனைகளையும் தகர்த்தார். இதனை மாஸ்டர் படம் விஜய்யாக அர்ஷ்தீப் சிங்கை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

Fantastic memes from social media after india won the t20 series against Ireland

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் 18 ரன்களிலும், திலக் வர்மா 1 ரன்னிலும் புல் ஷாட் ஆடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனை சந்திரமுகி படத்தில் ரஜினி, "வெள்ளை காயின் போகுது.. கறுப்பு காயினும் பின்னாடியே போகுதே.. சரியில்லையே" என்பார். அதனை மாற்றி, "ஓப்பனர் புல் ஷாட் ஆடி அவுட் ஆகுறான்.. நம்பர் 3யும் அதே புல் ஷாட் ஆடி அவுட் ஆகுறான்.. சரியில்லையே" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் குமுறல்

Fantastic memes from social media after india won the t20 series against Ireland

நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிவம் துபே அடுத்தடுத்து இரு இமாலய சிக்சரை விளாசினார். இதனை தில்லாலங்கடி படத்தில் வடிவேலு, "ஃபேன்ஸ் எல்லாரும் என்னைய ஜாக்சன்.. ஜாக்சன்னு தான் சொல்லுவாங்க" என்பார். இதனை அப்படியே மாற்றி துபே சொல்வதாக, "ஃபேன்ஸ்லாம் என்னைய சிக்சர் துபேனு கூப்பிடுவாங்க" என்று உருவாக்கப்பட்டுள்ளதான மீம் வேற லெவல்.

Story first published: Monday, August 21, 2023, 9:41 [IST]
Other articles published on Aug 21, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+