Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: ”ஐயா சூர்யகுமார்.. நீ அம்பியா இல்ல அந்நியனா?” ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic memes from Social media after Indian won by 5 wickets against West Indies

நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வெறும் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். டி20 போட்டிகளில் 68.16 பேட்டிங் சராசரியுடன் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் வெறும் 18.06 பேட்டிங் சராசரியுடன் விளையாடி வருகிறார். அதனை டி20 போட்டிகளில் அந்தியன் படத்தில் வரும் ரெமோவுடனும், ஒருநாள் போட்டிகளில் அம்பியை போலவும் ஆடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Fantastic memes from Social media after Indian won by 5 wickets against West Indies

12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் 7வது வீரராக களமிறங்கினார். விராட் கோலி 8வது வீரராக வருவதற்கு தயாராக இருந்தார். இதனை வசீகரா படத்தில் விழாவுக்கு வரும் உறவினர்களை உள்ளே அனுப்புவது போல், கோலி மற்றும் ரோகித் இருவரும் அனைத்து வீரர்களையும் பேட்டிங் செய்ய அனுப்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அமுக்கு டுமுக்கு அமால் டுமாம் ரகம்.

Fantastic memes from Social media after Indian won by 5 wickets against West Indies

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா கமெடியில் சால்னா எடுத்து வருவதற்குள் பரோட்டாவை சாப்பிட்டு முடிப்பார் சூரி. அதுபோல் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 23 ஓவர்களுக்கு மட்டுமே பேட்டிங் செய்தது. அந்த காமெடியில் எங்கடா பரோட்டா என்று கேட்பது போல், என்னடா 23 ஓவர் தான் பேட்டிங் பண்ணிருக்க என்று கேட்டதற்கு, வெஸ்ட் இண்டீஸ் அணி, நீங்க எல்லாரும் சீக்கிரம் தூங்கனும்னு தான் என்று பதிலளித்துள்ளது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

Fantastic memes from Social media after Indian won by 5 wickets against West Indies

நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியுடன் களமிறங்கினார். இதற்கு முன்பாக ஒருமுறை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் ஜெர்சியில் களமிறங்கினார். இதனை சிறுத்தை படத்தில் மயில்சாமியின் சட்டையை கழற்றி அணிவதற்காக கார்த்தி அளவெடுப்பது போல் சூர்யகுமார் யாதவ் மற்ற வீரர்களின் ஜெர்சியை பார்ப்பதாக உருவாக்கப்பட்டுள்ள அசத்தல் ரகம்.

Story first published: Friday, July 28, 2023, 7:48 [IST]
Other articles published on Jul 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+