Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இது டெல்லி கேபிட்டல்ஸ் இல்லடா.. டெல்லி டேர்டெவில்ஸ்" பொளக்கும் ரசிகர்கள்.. மிரட்டல் மீம்ஸ் இதோ!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாக்கிய சிறந்த மீம்ஸை பார்க்கலாம்.

Fantastic Memes from social media after Punjab won by 31 Runs against Delhi Capitals in IPL 2023

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தனியாளாக போராடிய இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங் 65 பந்துகளில் 103 ரன்கள் விளாசி அசத்தினார். இதனை புதுப்பேட்டை படத்தில் வரும் அரசியல்வாதி கதாபாத்திரம், "ஒரு ஆள்.. ஒரே ஆள்.. சும்மா சிங்கம் மாதிரி நின்னான்" என்று சொல்லுவார். அதனை அப்படியே தனுஷை பிரப்சிம்ரன் சிங்காக மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Fantastic Memes from social media after Punjab won by 31 Runs against Delhi Capitals in IPL 2023

நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியின் இளம் வீரரான பிரப்சிம்ரன் சிங் சதம் விளாச, இன்னொரு பக்கம் பந்துவீச்சில் ஹர்ப்ரீத் ப்ரார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதனை வாரிசு படத்தில் விஜய், "குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி" என்று சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி "சிங்-குகள் கொண்டாடும் வெற்றி" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.

Fantastic Memes from social media after Punjab won by 31 Runs against Delhi Capitals in IPL 2023

டெல்லி அணியின் பேட்டிங்கின் போது முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 69 ரன்களாக இருந்தது. இதையடுத்து டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் அனைவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை 136 வரையே உயர்த்தினர். இதனை படிக்காதவன் படத்தில் விவேக்கை பார்த்து தனுஷ்," பாஸ் ஏரியா பிரிச்சுட்டீங்களா" என்று கேட்கும் கேள்விக்கு விவேக், "அவங்க பிரிச்சுட்டாங்க" என்பார். அதனை அப்படியே மாற்றி வார்னர் மற்ற வீரர்களை பார்த்து, "மேட்ச் முடிச்சுட்டீங்களா" என்று கேட்பதற்கு, மற்ற வீரர்கள், "மேட்ச் அவங்க முடிச்சுட்டாங்க" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

Fantastic Memes from social media after Punjab won by 31 Runs against Delhi Capitals in IPL 2023

அடுத்தடுத்து தோல்விகளை பெற்று வந்த பஞ்சாப் அணி, நேற்று வாழ்வா சாவா போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றது. இதனால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு நீடிக்கிறது. இதனை புதுப்பேட்டை படத்தில் அடிவாங்கி நிற்கும் தனுஷை பார்த்து எதிரிகள், "இதோ பார்ணா.. இன்னும் நிக்கிது" என்று சொல்லுவார்கள். அதுபோல் பஞ்சாப் அணியை பார்த்து எதிரணிகள், "இதோ பார்ணா.. இன்னும் நிக்கிது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ் மாஸ்.

Fantastic Memes from social media after Punjab won by 31 Runs against Delhi Capitals in IPL 2023

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து முதலில் வெள்யேறும் அணியாக டெல்லி அணி சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 3 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு வந்த டெல்லி, நடப்பு சீசனில் முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனை இங்கிலீஸ்காரன் படத்தில் வடிவேலு, "இது வெடிகுண்டு இல்லடா.. வெறும் குண்டு" என்று சொல்லுவார். அதனை மாற்றி, இது டெல்லி "கேபிட்டல்ஸ் இல்லடா.. டெல்லி டேர்டெவில்ஸ்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

Story first published: Sunday, May 14, 2023, 7:51 [IST]
Other articles published on May 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+