Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா அவுட்... நடராஜன் இன்... குறைவான எக்ஸ்பீரியன்ஸ் பௌலர்களுடன் களமிறங்கும் இந்தியா

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இதில் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக தற்போது வெளியேறியுள்ளனர்.

மேலும் குறைவான எக்ஸ்பீரியன்ஸ் கொண்ட சிராஜ் உள்ளிட்ட பௌலர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது போட்டியில் களமிறங்க உள்ளனர்.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு போட்டி டிரா செய்து சமநிலையில் உள்ளன. இந்நிலையில் பிரிஸ்பேனில் வரும் 15ம் தேதி 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது.

பும்ரா நீக்கம்

பும்ரா நீக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த தொடர் இந்திய வீரர்களுக்கு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதியுற்று வருகின்றனர். கடந்த சில போட்டிகளுக்கு முன்பு காயம் காரணமாக முகமது ஷமி வெளியேறிய நிலையில் தற்போது 3வது போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ராவும் 4வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர்கள் ஆதிக்கம்

இளம் வீரர்கள் ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த தொடரில் முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமின்றி, இஷாந்த் சர்மா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றன. ஆயினும் புதிய வீரர்களை கொண்டு இந்த போட்டிகளை இந்திய அணி சமாளித்து வருகிறது.

நடராஜன் ஆட்டம்

நடராஜன் ஆட்டம்

இந்நிலையில் பிரிஸ்பேனில் வரும் 15ம் தேதி துவங்கி நடைபெறவுள்ள 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் நடராஜன் முதல் முறையாக தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சிராஜ், ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் இந்தியா களமிறங்க உள்ளது.

Story first published: Tuesday, January 12, 2021, 12:13 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+