Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவால பாதிக்கப்பட்ட பிரபல வீரரின் தந்தை... நன்றி சொன்ன வீரர்

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அணிவீரர்கள் தங்களது வீடுகள் மற்றும் நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேத்தன் சகரியாவின் தந்தைக்கும் கொரோனா பாதித்துள்ளது.

தள்ளிவைக்கப்பட்ட தொடர்

தள்ளிவைக்கப்பட்ட தொடர்

ஐபிஎல் 2021 தொடர் தற்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடரின் அடுத்தடுத்த அணிகளின் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ ஒத்தி வைத்து அறிவித்தது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்கள் பயணம்

வெளிநாட்டு வீரர்கள் பயணம்

ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டவுடனே இந்திய வீரர்கள் தங்களது வீடுகளுக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கும் செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில வீரர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தற்போது குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தைக்கு கொரோனா

தந்தைக்கு கொரோனா

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேத்தன் சகரியாவின் தந்தைக்கு தற்போது கொரோனா பாதித்துள்ளது. இதையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு ஐபிஎல்லிற்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பானது என உற்சாகம்

சிறப்பானது என உற்சாகம்

இதுகுறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிப்பதாகவும் அதனால் இந்த பணம் தனக்கு சிறப்பான வகையில் உதவி புரிந்துள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பே ராஜஸ்தான் அணியிலிருந்து தான் ஐபிஎல்லுக்கான பணத்தை பெற்றுள்ளதாகவும் இது சிறப்பானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 7, 2021, 15:27 [IST]
Other articles published on May 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+