Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஜர் பெடரருக்கு கிரிக்கெட் குறித்து நிறைய தெரிந்திருக்கிறது- சச்சின் வியப்பு

Roger Federer and Sachin Tendulkar
லண்டன்: டென்னிஸின் முடி சூடா மன்னனாக திகழும் ரோஜர் பெடரரை விம்பிள்டனில் வைத்து சந்தித்துப் பேசியுள்ள கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், பெடரரை பெருமளவில் புகழ்ந்துள்ளார்.

வருடா வருடம் நடைபெரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை மறக்காமல் போய் பார்த்து விட்டு வருவது சச்சினின் முக்கியக் கடமைகளில் ஒன்று. டென்னிஸ் மீது நிறைய பிரியம் வைத்துள்ள சச்சினுக்கு, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தாயாக கருதப்படும் விம்பிள்டன் போட்டிகள் என்றால் இன்னும் பாசம் அதிகம். எனவே ஆண்டுதோறும் அவர் விம்பிள்டனுக்கு மறக்காமல் போய் விடுவார்.

இந்த முறை சற்று விசேஷமானதாக இந்த பயணம் அமைந்துள்ளது. விம்பிள்டனுக்குச் சென்ற சச்சின், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் ஆட்டத்தை நேரில் பார்த்ததோடு அவரைச் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசி, மதிய உணவையும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு புளகாங்கிதப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறுகையில்,

ரோஜர் பெடரருடன் ஒரு மணி நேரம் செலவிட்டேன். விம்பிள்டன் ராயல் பாக்ஸில் உள்ள பால்கனியில் இருந்தபடி அவருடன் பேசியது பெருமையாக இருந்தது. என்ன ஒரு எளிமையான மனிதர் பெடரர். அவருக்கு நிறைய கிரிக்கெட்டும் தெரிந்திருக்கிறது என்பது ஆச்சரியம் அளித்தது என்று கூறியுள்ளார் சச்சின்.

பெடரர் மட்டும் சும்மாவா, அவரும் சச்சினை தனது பேஸ்புக் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், இன்று எனக்கு சிறப்பான நாளாக அமைநந்தது. நல்ல போட்டியை ஆடினேன். பின்னர், இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது என்று வர்ணித்துள்ளார்.

இமயமும், இமயமும் சேர்ந்து சந்தித்துப் பேசியது நிச்சயம் சந்தோஷமான விஷயம்தானே...
Story first published: Friday, June 1, 2012, 17:30 [IST]
Other articles published on Jun 1, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+