Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பான வீரர்... ஐபிஎல்லுல அவரும் விளையாடியிருக்கணும்... பீலிங்சை வெளியிட்ட புஜாரா!

மும்பை : இந்த சீசனில் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் புஜாரா.

இந்த சீசனுக்கான ஏலத்தில் புஜாரா 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில், பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி ஏலம் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஹனுமா விஹாரி ஐபிஎல் 2021 தொடரில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று புஜாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிஎஸ்கேவில் புஜாரா

சிஎஸ்கேவில் புஜாரா

ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. கடந்த சில தொடர்களில் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறாத அவர் தற்போது சிஎஸ்கே அணியால் 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

புஜாரா வருத்தம்

புஜாரா வருத்தம்

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி இந்த சீசனில் விளையாடியிருக்க வேண்டும் என்று புஜாரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சீசன்களில் ஐபிஎல்லில் ஈடுபட்டிருந்த ஹனுமா விஹாரி இந்த சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பலன் அனுபவிக்கும் நேரம்

பலன் அனுபவிக்கும் நேரம்

மேலும் தான் இந்திய அணிக்காக செயலாற்றியதற்கான பலன்தான் தற்போது தான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் புஜாரா தெரிவித்துள்ளார். நாம் தேசத்திற்காக ஒரு செயலை செய்யும்போது அதை மக்கள் விரும்புவார்கள் என்றும் அணி மட்டும் இன்றி சக வீரர்களும் தனக்காக மகிழ்ச்சியை வௌப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பதற்றம் இல்லை

பதற்றம் இல்லை

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியிலிருந்து ஐபிஎல்லில் விளையாடாத ஒரு வீரர் தான் மட்டும் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் தான் ஐபிஎல்லில் விளையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள புஜாரா, தோனியின் கீழ் விளையாடுவது தனக்கு எந்த பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அணிக்காக 100 சதவிகித ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 4, 2021, 14:19 [IST]
Other articles published on Apr 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+