ஐபிஎல் தொடங்கிய போது இவர்களுக்கு 6 வயதுதான்.. இப்போது டி-20 போட்டியின் ஹீரோக்கள்!

Posted By:

சென்னை: முதல் ஐபிஎல் போட்டி தொடங்கிய போது 2ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது ஐபிஎல் போட்டியில் மிக முக்கியமான வீரர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள்.

2008 ஏப்ரல் 18ம் தேதி பெங்களூர் மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி நடந்தது. பெங்களூர் அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையில் நடந்த இந்த போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வென்றது.

அப்போது மிகவும் சிறியவர்களாக இருந்தவர்கள் இப்போது ஐபிஎல் போட்டியில் மிக முக்கியமான வீரர்களாக மாறியுள்ளனர். இவர்கள் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கமலேஷ் நாகர்கோட்டி ஐபிஎல்

கமலேஷ் நாகர்கோட்டி ஐபிஎல்

தற்போது கமலேஷ் நாகர்கோட்டி கொல்கத்தா அணிக்காக 3.2 கோடி கொடுத்து எடுக்கப்பட்டுள்ளார். அண்டர் 19 போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இவருக்கு இந்த வாய்ப்பு அமைத்து இருக்கிறது. இந்த அதிவேக பவுலர் முதல் ஐபிஎல் போட்டியின் போது ராஜஸ்தானில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சுபமான் கில் ஐபிஎல்

சுபமான் கில் ஐபிஎல்

சுபமான் கில்லும் கொல்கத்தா அணிக்காக 1.8 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளார். இவர் சிறந்த பேட்ஸ்மேன். அண்டர் 19 உலக கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். 2008ல் முதல் ஐபிஎல் போட்டியின் போது பஞ்சாப்பில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

பிரித்வி ஷா ஐபிஎல்

பிரித்வி ஷா ஐபிஎல்

பிரித்வி ஷா ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக எடுக்கப்பட்டுள்ளார். இவர் 1.2 கோடி கொடுத்து எடுக்கப்பட்டார். இந்திய அணியை அண்டர் 19 உலக கோப்பை போட்டியில் கேப்டனாக கோப்பை பெற வைத்ததுஇவர்தான். முதல் ஐபிஎல் போட்டியின் போது மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஆப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மான்

ஆப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மான்

ஆப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் தற்போது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். ஆச்சர்யமாக 4 கோடி கொடுத்து இவர் எடுக்கப்பட்டார். ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் முதல் ஐபிஎல் போட்டியின் போது இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேபாள் வீரர்

நேபாள் வீரர்

நேபாள் வீரர் சந்திப் லெமிச்சனே ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடுகிறார். நேபாளில் இருந்து விளையாடும் முதல் வீரர் இவர்தான். இவர் 20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு 17 வயது ஆகிறது. முதல் ஐபிஎல் போட்டியின் போது இவர் நேபாளில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சுந்தர்

சுந்தர்

அதேபோல் பெங்களூர் அணிக்காக எடுக்கப்பட்டு இருக்கும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கூட மிகவும் இளமையானவர். 3.20 கோடி கொடுத்து வாஷிங்டன் சுந்தர் ஏலம் எடுக்கப்பட்டார். முதல் ஐபிஎல் போட்டியின் போது இவருக்கு 7 வயது மட்டுமே ஆகி இருந்தது. அவர் அப்போது சென்னையில் இரண்டாவது படித்துக் கொண்டு இருந்துள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Few players were studying just their second class in IPL 2008 season.
Story first published: Thursday, April 5, 2018, 17:21 [IST]
Other articles published on Apr 5, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற