Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்த பவுண்டரிகள்... அதிரடி அரைசதம்... கலக்கல் பிரித்வியின் கலக்கல் ஆட்டம்

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 20வது போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 160 ரன்களை இலக்காக கொடுத்துள்ளது.

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா அதிரடி அரைசதத்தை அடித்துள்ளார்.

20வது போட்டி

20வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 20வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் மட்டுமின்றி அடுத்து வந்த ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களும் அதிரடி காட்டினர்.

வெற்றிக்கான கட்டாயம்

வெற்றிக்கான கட்டாயம்

இதுவரை 4 போட்டிகளில் விளையாடி கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ள சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் வென்று அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆயினும் அணியின் பௌலிங் ஆர்டரை சரிசெய்ய வேண்டிய கட்டாயமும் அந்த அணி உள்ளது.

1000 ரன்களை கடந்து சாதனை

1000 ரன்களை கடந்து சாதனை

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் ஐபிஎல்லில் இதுவரை ஆடியுள்ள போட்டிகளில் பார்ட்னர்ஷிப்பில் 1000 ரன்களை கடந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய போட்டியிலும் இவர்களின் அதிரடி பார்ட்னர்ஷிப் தொடர்ந்தது.

50க்கும் மேற்பட்ட ரன்கள் குவிப்பு

50க்கும் மேற்பட்ட ரன்கள் குவிப்பு

இன்றைய போட்டியில் பிரித்வி மற்றும் ஷிகர் தவான் இருவரும் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருந்தனர். இதனிடையே, 26 பந்துகளில் 28ரன்களை அடித்திருந்த நிலையில் ரஷீத் கான் பௌலிங்கில் ஷிகர் தவான் அவுட்டானார். இதில் 3 பவுண்டரிகளும் அடக்கம். இதேபோல பிரித்வி ஷாவும் அதிரடி காட்டினார்.

அடுத்தடுத்த பவுண்டரிகள்

அடுத்தடுத்த பவுண்டரிகள்

பிரித்வி ஷா 39 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம். இதன் ஸ்டிரைக் ரேட் 135.90. ஆனால் கலீல் அகமது பௌலிங்கில் பிரித்வி ஷா அவுட்டானார். முன்னதாக அவரது துவக்கமே அதிரடியாக அமைந்தது. முதல் 3 பந்துகளில் அவர் அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்தார்.

Story first published: Sunday, April 25, 2021, 23:03 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+